Sugar Benefits For Skin: ஆரோக்கியத்தின் அடிப்படையில் பலர் சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்ப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் சரும பாதுகாப்புக்கு சர்க்கரை மிகுந்த நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சருமத்தில் சர்க்கரையைப் பயன்படுத்தி ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகளைப் பெறலாம். முகத்தில் உள்ள கறைகளை நீக்குவதில் சர்க்கரை ஒரு அற்புதமாக இயற்கை மருந்தாக உதவும்.
இந்த பதிவில், சர்க்கரையைப் (Sugar) பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
முகத்திற்கு இந்த வழியில் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள்
1. தயிருடன் சேர்த்து இந்த முறையில் சர்க்கரையைப் பயன்படுத்தவும்
- இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை இரண்டு கரண்டி தயிரில் கலக்கவும்
- இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவவும்.
- இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும்.
- பின்னர் முகத்தை கைகளால் லேசாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
- அதன் பிறகு தண்ணீர் கொண்டு கழுவவும்.
- இது உங்கள் சருமத்தில் உள்ள உலர்ந்த திசுக்களை நீக்கும்.
- பின்னர், உங்கள் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
2. பீட்ரூட்டுடன் சர்க்கரை
- இரண்டு கரண்டி பீட்ரூட் (Beetroot) சாற்றில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலக்கவும்.
- பிறகு அதை மெதுவாக உங்கள் உதடுகளில் ஐந்து நிமிடங்கள் தடவவும்.
- அதன் பிறகு உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும்
- பீட்ரூட் மற்றும் சர்க்கரை உங்கள் உதடுகளில் இருந்து இறந்த தோல் திசுவை நீக்கிவிடும்.
- இது உதடுகளை இளஞ்சிவப்பாக்கி மென்மையாக்க உதவும்.
ALSO READ: தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
3. காபியுடன் சர்க்கரை
- சர்க்கரையுடன் காபியை கலந்து, அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
- இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, கைகளால் லேசாக ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் தேய்க்கவும்.
- அதன் பிறகு முகத்தை நன்கு கழுவுங்கள்.
- இதன் மூலம் நீங்கள் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை அகற்ற முடியும்.
- மேலும், உங்கள் வறண்ட சரும திசுக்களும் எளிதில் வெளியேறி, சருமமும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
4. எலுமிச்சையுடன் சர்க்கரை
- நீங்கள் சர்க்கரை மற்றும் எலுமிச்சை (Lemon) கலவையைப் பயன்படுத்தியும் பயன் பெறலாம்.
- இதற்கு, இரண்டு கரண்டி சர்க்கரையில் நான்கு கரண்டி எலுமிச்சை சாற்றை கலக்கவும்.
- பின்னர் அதை முகத்தில் தடவி கைகளால் லேசாக மசாஜ் செய்யவும்.
- சர்க்கரை கரையும் வரை மசாஜ் செய்யவும்.
- அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும்.
- இதனால் உங்கள் சருமத்தில் உள்ள கறைகள் நீங்கி, சருமம் அப்பழுக்கற்றதாக இருக்கும்.
குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்று அல்ல. இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ: Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR