கொலஸ்ட்ரால்... இந்த இடங்களில் வலி இருந்தால் அலட்சியம் வேண்டாம்... உடனே செக் பண்ணுங்க...

High cholesterol Symptoms: உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு இதயம். தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடையும் நிலையில், கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2024, 10:58 AM IST
  • கொலஸ்ட்ரால் நரம்புகளில் படிந்து, இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.
  • இன்றைய டென்ஷன் நிறைந்த வாழ்க்கை முறை, உணவு பழக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விட்டன.
  • கொல்ஸ்டிராலை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
கொலஸ்ட்ரால்...  இந்த இடங்களில் வலி இருந்தால் அலட்சியம் வேண்டாம்... உடனே செக் பண்ணுங்க... title=

High cholesterol Symptoms: உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு இதயம். தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடையும் நிலையில், கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. இன்றைய டென்ஷன் நிறைந்த வாழ்க்கை முறை, உணவு பழக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விட்டன. அதில் ஒன்று கொலஸ்ட்ரால். 

பொதுவாக, கொலஸ்ட்ரால் அளவு உடலில் 200 mg/dL வரை இருக்க வேண்டும். இந்த அளவு 240 mg/dL என்ற அளவைத் தாண்டினால், . மெழுகு போன்ற ஒரு பொருளாகொலஸ்ட்ரால் நரம்புகளில் படிந்து, இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் இதய நோய்களின் ஆபத்தும் அதிகரிக்கிறது. எனவே கொல்ஸ்டிராலை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் உடல் உறுப்புகளில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வலி இருந்தால், அது கொலஸ்டிரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில அறிகுறிகளின் அடிப்படையில் தான் உடலில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.  எனவே, அதனை அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதித்துக் கொள்வது நல்லது.

LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதற்கான சில அறிகுறிகள்

மார்பில் வலி

நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்  காரணமாக இதய தமனியின் சுவர்கள் கடினமாக ஆகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதயத்துக்கு ரத்தம் சரியாகச் சென்றடையாமல், ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் மார்பு வலி அல்லது நெஞ்சுவலி ஏற்படுகிறது. எனவே, இந்த அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்.

மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!

தசைப்பிடிப்பு

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக நரம்புகளில் அடைப்பு  ஏற்படுவதால், தசைப்பிடிப்பு பிரச்சனை ஏற்படலாம். அடிக்கடி காரணம் இல்லாமல் தசை பிடிப்பு ஏற்பட்டால், அலட்சியம் வேண்டாம். கால்கள், கைகள் மற்றும் தொடைகளில் பிடிப்புகள் பிரச்சனை இருந்தால் அதற்கு கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம் என்பதல் பரிசோதித்து கொள்வது நல்லது

கால்களில் வலி

கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படும் நரம்பு பாதிப்புகளில் கால்களில் உள்ள நரம்புகளும் அடங்கும். கால்களில் வலி மற்றும் பிடிப்புகள் அதன் அறிகுறிகள். நடக்கும்போது கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக கால்களில் வலியை ஏற்படலாம்.

கை மற்றும் கால்களில்  ஏற்படும் வீக்கம் மற்றும் உணர்வின்மை

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கை, கால்களில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்குவதால், நரம்புகளின் நிறம் மாறலாம். கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மை ஆகியவை  ஏற்படலாம். மேலும் கைகளும் கால்களும் பலவீனமாக இருப்பதாக் உணரலாம்.

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான பிற அறிகுறிகள்

உடல் உறுப்புகளில் வலியைத் தவிர, கொலஸ்ட்ரால் இருப்பதற்கான பல அறிகுறிகள் நம் உடலில் தோன்றலாம். அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றல், தலைவலி, அதீத சோர்வு, வாந்தி குமட்டல் ஆகியவையும் கொலஸ்ட்ராலுக்கான பிற அறிகுறிகள் ஆகும்.

கொலஸ்ட்ரால்  அளவு அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை (Natural Ways to Reduce High Cholesterol)

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தவிர்க்க, நமது உணவு முறையிலும் , வாழ்க்கை முறையிலும் நிச்சயம் மாற்றங்கள் செய்ய வேண்டும். சமச்சீர் உணவு அவசியம். டயட்டில் பல வகையான் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பை எரிக்கும் திறன் கொண்ட பூண்டு, இஞ்சி, பச்சை காய்கறிகள் ஆகியவை அவசியம் தேவை. உடற்பயிற்சியும் அவசியம் தேவை. பொரித்த உனவுகள், துரித உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News