High Uric Acid பாடாய் படுத்துகிறதா? அப்போ சீரகத் தண்ணீரைக் குடியுங்கள்

Jeera Water For Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பொதுவான பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் இது தீவிரமடையலாம். எனவே அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க ஒரு இயற்கை தீர்வு உள்ளது, அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2024, 07:12 PM IST
  • சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
  • உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
High Uric Acid பாடாய் படுத்துகிறதா? அப்போ சீரகத் தண்ணீரைக் குடியுங்கள் title=

Cumin Seeds For High Uric Acid: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் யூரிக் அமில அளவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும் தற்போது 90 சதவீத மக்கள் யூரிக் அமில பிரச்சனையால் போராடி வருகின்றனர். அதிக யூரிக் அமில அளவு கீல்வாதம் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு இயற்கையான மற்றும் எளிமையான தீர்வாக சீரகம் தண்ணீர் இருக்கும். சீரகத் தண்ணீரைக் குடிப்பது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of Drinking Cumin Water:

1. யூரிக் அமில அளவைக் குறைக்கலாம்: சீரக தண்ணீரில் (Cumin Water) உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும். இது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இதனால் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியும்.

2. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது: சீரக தண்ணீர் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அமிலத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, மேலும் இது உடலில் நச்சுகளை அகற்ற உதவும்.

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!

3. உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவியாக இருக்கும்: சீரக தண்ணீரை வழக்கமாக உட்கொள்வது உடல் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும், இது அதிக யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

யூரிக் அமில அளவைக் குறைக்க சீரக தண்ணீரின் செய்முறை | (How To Make Cumin Water):
முதலில் இரண்டு தேக்கரண்டி சீரகம், ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் முன், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் காலையில் எழுதிவுடன் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், சீரக தண்ணீரை உட்கொள்வதை நிறுத்தவும், மேலும் உங்களின் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

சீரக தண்ணீர் ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான தீர்வாகும், இது அதிக யூரிக் அமில அளவைக் (Uric Acid Home Remedies) கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இந்த தினமும் குடித்து வந்தால் யூரிக் அமிலத்தை குறையும், அதனுடன், செரிமான அமைப்பையும் மேம்படுத்த உதவும். அதுமட்டுமின்றி இந்த தண்ணீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். எனவே, சீரக தண்ணீரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சேர்த்து, அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News