முருங்கையின் ஆரோக்கிய நன்மைகள்: முருங்கை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. முருங்கையின் காயும், இலைகளும் ஆயுர்வேதத்தில் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கைக்காய் இந்த நாட்களில் மிகவும் பிரபலமான புதிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. அதன் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, இது உயிர்வாழ உதவும் உணவு (Survival Food) என்றும் அழைக்கப்படுகிறது.
முருங்கையில் (Drumstick) புரதம், கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. முருங்கையில் கனிமங்களும் நிறைந்துள்ளன. முருங்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மருத்துவ சக்தியாகும். இது பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிடிரஸன் பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் இலைகள் முதல் காய் வரை அனைத்தும் மிகவும் நன்மை பயக்கும் பொருட்களாக உள்ளன. முருங்கைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்:
முருங்கை இலைகளை சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அவற்றை உண்பதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. முருங்கையில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது உணவு உண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ALSO READ:WALNUT: காலையில் வெறும் வயிற்றில் 2 வாதுமைக் கொட்டை செய்யும் மாயங்கள்
2- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்:
முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இரத்த நாளங்கள் உறைவதற்கு வழிவகுக்கும். மாரடைப்பு அபாயமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
3- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
முருங்கை இலையை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பலப்படும். இதன் இலைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. எந்தவொரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் இவை உதவுகின்றன. முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
4- ஆற்றல் பெருகும்:
முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. இது சோர்வு பிரச்சனையை நீக்குகிறது. முருங்கை இலையில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், தூக்கம் மற்றும் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
5- எலும்புகளை வலுவாக்கும்:
முருங்கை இலைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இதன் காரணமாக எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். கீழ்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸை (Osteoporosis) எதிர்த்துப் போராட உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் முருங்கை இலைகளில் உள்ளன.
ALSO READ:Hair Care Tips: கூந்தல் உதிர்வதை தடுக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR