உடல் சூடு உங்களை வாட்டி வதைக்கிறதா? சமயலறைப் பொருள் மூலம் ஓர் இரவில் நிவாரணம்

உடல் சூடு மூலம் பல உபாதைகள் ஏற்படும் நிலையில், அதனை சமயலைறயில் இருக்கும் வெந்தயம் உள்ளிட்டவைகளைக் கொண்டே நாம் சரி செய்து கொள்ள முடியும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 23, 2023, 06:42 AM IST
  • உடல் சூடு வாட்டி வதைக்கிறதா?
  • வீட்டிலேயே நிவாரணம் பெறலாம்
  • வெந்தயம் மற்றும் தண்ணீர் போதும்
உடல் சூடு உங்களை வாட்டி வதைக்கிறதா? சமயலறைப் பொருள் மூலம் ஓர் இரவில் நிவாரணம் title=

கோடை வெப்பம் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், சிலருக்கு எப்போதும் உடல் சூடு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து நிவாரணம் பெற முடியாமல் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளை எதிர்கொண்டே இருப்பார்கள். மருந்து மாத்திரைகளும் குறுகிய கால நிவாரணத்தை மட்டுமே கொடுப்பதால் சிலர், என்ன செய்வதென்றே தெரியாமல் மனதை குழப்பிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. அப்படியான பிரச்சனை எதிர்கொள்பவர்கள் கொஞ்சம் சிந்தித்தால் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் சமயலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே நிவாரணம் தேடிக் கொள்ள முடியும். 

வெந்தயம் நிவாரணம்

வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும்வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன்விழுங்கினால் உடல் சூடு குறையும். வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம்.

மேலும் படிக்க |  ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன!

2 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள்

ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகைபோட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும்இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவவேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும். இதன்மூலம் மனஅழுத்தமும் குறையும். ஆகையால் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள்இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முயற்சிக்கலாம்.

விளக்கெண்ணெய்

பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாகதேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனைகண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம். சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். இதனைகுறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம்முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால்எரிச்சல் குணமாகும்.

மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News