சரும ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

சரும் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள் குறித்த தொகுப்பு.

Written by - க. விக்ரம் | Last Updated : May 22, 2022, 05:16 PM IST
  • சருமத்திற்கு உதவும் உணவுகள்
  • தினசரி உணவுகள் மூலமே சருமத்தை பாதுகாக்கலாம்

Trending Photos

 சரும ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள் title=

சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல், பேஸ் கிரீம்கள் உள்ளிட்டவைகளை பலர் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், தினசரி சாப்பிடும் உணவுகள் மூலமாகவே சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட உணவுகள் பின்வருமாறு: 

வால் நட்: 

ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. எனவே வால் நட்டை சாப்பிடுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.மேலும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. வால்நட்டில் இருக்கும் துத்த நாகம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், காயங்களை கட்டுப்படுத்துகின்றன.

டார்க் சாக்லேட்: 

பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது.

மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைப்பாடால் முடி வெள்ளையாக மாறுமாம்

இதில் கார்டியோபிராக்டிவ் பண்பு இருப்பதால் இதயத்தை பாதுகாக்க துணை புரிகிறது. மேலும் டார்க் சாக்லேட்டில் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் இருப்பதால் சருமம் பாதுகாக்கப்படுகின்றன.

தக்காளி: 

சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளியை உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். 

மேலும் படிக்க | Raw Milk: பசும்பால் குடிப்பது நல்லதா, கெடுதலா; ஷாகிங் உண்மை

தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News