இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஒரு நாளைக்கு நான்கு செலரி தண்டுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதிலுள்ள பித்தலைட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 19, 2022, 05:59 AM IST
  • இரத்த அழுத்தம் அதிகரித்தால் பலவித பிரச்சனைகள் ஏற்படும்.
  • சில சமயம் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டுவிடும்.
  • உயர் இரத்த அழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்! title=

உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும், இரத்த அழுத்தம் அதிகரித்தால் பலவித ஆபத்துகள் ஏற்பட்டு உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டுவிடும்.  இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் எதுவுமின்றி ஒரே சீராக இரத்த அழுத்தத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம்.  சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ  ஹெச்ஜி அல்லது அதற்கும் குறைவாக உள்ளது, 120 முதல் 129 மிமீ ஹெச்ஜி வரையிலும், 80 மிமீ ஹெச்ஜிக்கு மேல் இல்லாமல் கீழே இருக்கும் போதும் இரத்த அழுத்தம் உயர்கிறது மற்றும் 180/120 மிமீ ஹெச்ஜிக்கும் அதிகமான இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. பொதுவாக உயர் இரத்த அழுத்தம் என்பது உடலின் தமனிகளைப் பாதிக்கும் ஒரு நிலை, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் தமனிச் சுவர்களுக்கு எதிராகத் தள்ளும் இரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாக இருக்கும். 

மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ பானம் இது தான்!

உயர் இரத்த அழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பல ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  புகைபிடிப்பதை தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்தல் மற்றும் நன்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது போன்றவை தான் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த சிகிச்சையென மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவின் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.  மேலும் வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, கிவி, மாம்பழம், தர்பூசணி , மாதுளை, பிளம்ஸ், கொடிமுந்திரி, ஆப்ரிகாட், திராட்சை, அவோகேடோ, தக்காளி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி ஆகியவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க சிறந்த பழங்களாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  தற்போது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் உணவில் இடம்பெற வேண்டிய 5 வகையான உணவுப்பொருட்களை பற்றி இங்கே காண்போம்.

1) வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த சிட்ரஸ் வகை பழங்கள் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

2) ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மற்றும் பிற கொழுப்பு நிறைந்த மீன்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

3) இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு தன்மையை அதிகரிக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் அந்தோசயனின்களின் இயக்கத்திற்கும் பெர்ரி பழங்கள் உதவுகிறது.

4) ஒரு நாளைக்கு நான்கு செலரி தண்டுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதில் பித்தலைட்ஸ் எனப்படும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது. இது மேம்பட்ட இரத்த ஓட்டத்தை அனுமதிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

5) பூசணி விதைகள் மற்றும் எண்ணெய் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News