சர்க்கரை நோயினால் பயமா? இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

ஒரு மனிதருக்கு சாப்பிடுவதற்கு முன்னர் ரத்த சர்க்கரையின் அளவு 100க்கும் குறைவாக இருக்க வேண்டும், சாப்பிட்ட பிறகு 140க்கு குறைவாக இருக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2022, 05:57 AM IST
  • குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது.
  • நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உணவு கட்டுப்பாடு அவசியம்.
  • சில உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோயினால் பயமா? இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க! title=

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லையென்றால் தான் ஆச்சர்யம், அந்தளவிற்கு நீரிழிவு நோயினால் ஏரளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது, உயர் ரத்த சர்க்கரை அளவு நமது உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.  நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உணவு கட்டுப்பாடு அவசியம், மற்றவர்களை போல நீரிழிவு நோயாளிகள் அனைத்து உணவுகளையெல்லாம் சாப்பிட்டுவிட முடியாது.  நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம், சாதாரண மனிதருக்கு சாப்பிடுவதற்கு முன்னர் ரத்த சர்க்கரையின் அளவு 100க்கும் குறைவாக இருக்க வேண்டும், சாப்பிட்ட பிறகு 140க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே கொழுப்பை குறைக்கும் 3 உடற்பயிற்சி 

ஊட்டச்சத்து மிகுதியான அதேசமயம் ரத்த சர்க்கரையின் அளவை, அதிகரிக்காத வண்ணம் சில உணவுப்பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்காகவே ஸ்பெஷலாக உள்ளது.  அத்தகைய உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம், நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை பொறுத்துதான் நம்முடைய உடலில் ரத்த சர்க்கரையின் அளவும் மாறுபடும்.  தற்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய சூப்பரான உணவு வகைகளை இங்கே பார்க்கலாம்.

1) இலவங்கப்பட்டையில் ஏரளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, ஒருவரது டயட்டில் கண்டிப்பாக இலவங்கப்பட்டை வேண்டியது அவசியமானதாகும்.  இது ரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமின்றி கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.

2) வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.  இதில் நிறைய பிளேவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளது.

3) நொதித்தல் செயல்முறை நடக்கும் தயிரில் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை இருக்கிறது, இது சிறந்த உணவாக கருதப்படுகிறது.

4) பூசணிக்காய் விதை, ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற விதை வகைகளில் அதிகளவில் நார்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளது.  இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

5) பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளில் அதிகளவில் நார்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது.  இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.

6) ஓட்ஸ், குயினோவா, கோதுமை போன்ற முழு தானியங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறது.

7) நட்ஸ் வகைகளை சாப்பிடுவதால் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது.

8) பொதுவாக பலரது டயட்டுகளிலும் பிரபலமாக இடம்பெறும் ஒரு உணவுப்பொருள் முட்டை, இதனை நீரிழிவு நோயாளிகள் தினமும் அவர்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News