உறக்கத்தில் உமிழ் நீர் வடிகிறதா?... தீர்வு என்ன...

உறக்கத்தில் பலருக்கு உமிழ் நீர் வடிவது விரும்பத்தகாத ஒன்றாகும். அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 26, 2022, 04:02 PM IST
  • உறக்கத்தில் உமிழ்நீர் வடிவது பெரும்பாலானோருக்கு இருக்கிறது
  • இதனால் அவர்கள் உறங்கும்போது சங்கடங்களை சந்திக்க நேர்கிறது
  • அதை வீட்டு வைத்தியம் மூலமாகவே போக்கலாம்
உறக்கத்தில் உமிழ் நீர் வடிகிறதா?... தீர்வு என்ன... title=

ஒரு மனிதனுக்கு உறக்கம் மிக மிக முக்கியம். ஆனால் அந்த உறக்கத்தின்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது உமிழ் நீர் வடிதல். உமிழ் நீர் வடிவதால் அந்த பிரச்னை இருப்பவர்களால் நிம்மதியான உறக்கத்திற்குள் செல்ல முடியாது. மேலும் பயணத்திலோ, பொது இடங்களிலோ அவர்கள் உறங்கினால் உமிழ் நீர் வடிவதால் சில சங்கடங்களை சந்திப்பதும் உண்டு. இந்தப் பிரச்னை இளம் வயதினர் முதல் வயதானவர்கள்வரை பலருக்கும் இருக்கிறது. இதன் காரணமாக கேலி, கிண்டலுக்கு உள்ளாகுபவர்களும் உண்டு. 

மனிதனுக்கு பொதுவாக தினமும் 1 முதல் 2 லிட்டர்வரை உமிழ்நீர் சுரக்கும். குழந்தைகளுக்கு தூக்கத்தின்போது வாயில் நீர் வழிதல் என்பது இயல்பான விஷயம். ஆனால், பெரியவர்களுக்கு அவ்வாறு ஏற்பட்டால் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

உறக்கத்தில் உமிழ் நீர் வடிவதற்கான காரணங்கள்:

முதுகுப் பகுதி கீழே படும்படியாக உறங்குவதைவிட பக்கவாட்டிலோ, குப்புறப் படுத்தோ உறங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. மல்லாந்து படுக்கும்போது, வாயில் சுரக்கும் எச்சிலை நம்மை அறியாமல் விழுங்கிவிடுவோம். அதுவே பக்கவாட்டில் படுக்கும்போது, அது வாயின் ஒரு பகுதியில் சேர்ந்து கொள்ளும். குப்புறப் படுக்கும்போது, நம்மை அறியாமல் வாயில் இருந்து வெளியே வடியும். சிலருக்கு வாய் திறந்து தூங்குவதால் இவ்வாறு நேரும். 

மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு பக்கவிளைவாக தூக்கத்தில் உமிழ்நீர் வழியும் பிரச்னை ஏற்படலாம். அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு இயல்பாகவே, உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கும். இதைத் தூக்கத்தில் விழுங்கும் தன்மை இல்லாததால் வெளியே வடியக்கூடும். சளி, இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள், அலட்சியப்படுத்த வேண்டாம்

தொண்டையில் பிரச்னை உள்ளவர்களும், வலியால் எச்சிலை விழுங்க முடியாமல் தவிப்பதுண்டு. இவர்களுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர் அப்படியே தேங்கி இருக்கும். இந்த நீர் தூக்கத்தில் வாய் வழியாக வெளியேறும். அதேபோல், தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படும். நரம்பியல், மூளை சார்ந்த பாதிப்பு இருப்பவர்களுக்கும் தூக்கத்தில் உமிழ்நீர் வடிவது தவிர்க்க முடியாத ஒன்று.

தீர்ப்பதற்கான வழிகள்:

படுக்கும்போது மல்லாந்து படுப்பதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். அப்படி செய்தால் இந்தப் பிரச்னை படிப்படியாக தீரும். அதேபோல், உமிழ்நீர் வடிவதை தடுக்கும் உபகரணங்கள்  விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாங்கிப் பயன்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி, இரவு உணவுக்குப் பின்பு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய்ப் பொடியை கலந்து குடித்து வந்தால், தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அதேபோல், லவங்கப் பட்டையைத் தூளாக்கி அதை டீயாகத் தயாரித்து, தினமும் குடித்து வந்தால் உமிழ்நீர் வடிவதற்குத் தீர்வு கிடைக்கும். சிறிதளவு துளசி இலையை வாயில் போட்டு மென்றாலும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News