மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள், அலட்சியப்படுத்த வேண்டாம்

இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடுக்கப்படும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குவிவதால் ஏற்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 26, 2022, 09:19 AM IST
  • இதயம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு
  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
  • மாரடைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள், அலட்சியப்படுத்த வேண்டாம் title=

நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு இதயமாகும். அந்தவகையில் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். இதயத் துடிப்பில் சிறிதளவு ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் கூட பல சிரமங்கள் ஏற்படும். ஆரம்பத்தில், நோயாளிக்கு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும். பிறகு இந்த பிரச்சனைகள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே நீங்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மாரடைப்பின் இந்த அறிகுறிகளைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போதோ அல்லது தடுக்கப்படும் போதோ ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குவிவதால் ஏற்படுகிறது. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் நாளங்கள் கரோனரி தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக உங்களின் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஆகச் சிறந்த ஐந்து பழங்கள்

மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?  
மாரடைப்புக்கு முன், நம் உடலில் பல மாற்றங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன், நீங்கள் உடனடியாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். எனவே மாரடைப்பு வருவதற்கு முன்பு, ஒருவர் மார்பு வலி, தாடை அல்லது பற்களில் வலி, சுவாசிப்பதில் சிக்கல், அதிகளவு வியர்வை, வாயு உருவாக்கம், தலைச்சுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

எந்த வயதினருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம்
பொதுவாக மாரடைப்பு எந்த வயது மக்களுக்கும் ஏற்படலாம். இருப்பினும், மருத்துவர்களின் கூற்றுப்படி 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதய ஆரோக்கியத்திற்கு இந்த விஷயங்களை தவிர்க்கவும்

சிகரெட் மற்றும் ஆல்கஹால்
சிகரெட் மற்றும் ஆல்கஹால் நமது நுரையீரல் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும். அதேபோல் இவை நம் ஆரோக்கியமான இதயத்திலும் சிக்கலை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். 

குளிர்பானங்கள்
நாம் புத்துணர்ச்சியடைய அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்கிறோம், ஆனால் அதில் சோடாவின் அளவு அதிகமாக உள்ளது, இதனால் நமது இதயம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதன் வழக்கமான நுகர்வு இதய நோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. 

எண்ணெய் உணவுகள் 
இந்தியாவில் எண்ணெய் உணவுகளின் போக்கு மிக அதிகமாக உள்ளது, அந்தவகையில் இது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கி, மாரடைப்புக்கு காரணமாகிறது.

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News