இதய ஆரோக்கியம் முதல் விந்து சக்தி வரை... மாயங்கள் செய்யும் பூசணி விதை..!!

Pumpkin Seeds Health Benefits: பூசணி விதை அல்லது பரங்கி விதையின் மகத்துவம் தெரியாததால், நாம் அலட்சியமாக தூக்கி வீசி விடுகிறோம். இந்த செய்தியை படித்தால் நீங்கள் இனி அதை செய்ய மாட்டீர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2024, 12:04 PM IST
  • பூசணி விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்.
  • தினமும் பூசணி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
  • விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க, பூசணி விதைகள் உதவும்.
இதய ஆரோக்கியம் முதல் விந்து சக்தி வரை... மாயங்கள் செய்யும் பூசணி விதை..!! title=

தினமும் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: பெரும்பாலும் நம்மில் பலர் பூசணி வகை காய்கறிகளை சாப்பிட்டு விட்டு, தூக்கி எறிந்து விடுவோம். பூசணிக்காயுடன் ஒப்பிடும்போது பூசணி விதைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் கொட்டி கிடக்கின்றன. பூசணி விதையை பரங்கி விதை என்றும் கூறுவார்கள். அதன் மகத்துவம் தெரியாததால், நாம் அலட்சியமாக தூக்கி வீசி விடுகிறோம். இந்த செய்தியை படித்தால் நீங்கள் இனி அதை செய்ய மாட்டீர்கள்.

பூசணி விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

பூசணி விதைகளில், வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மட்டும் அல்லாது ஆரோக்கிய கொழுப்புகளும் நிறைந்துள்ளது. வைட்டமின் கே, வைட்டமின் ஈ சத்துக்கள் பூசணி விதைகளில் அதிகம் காணப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாது இதில் நார்ச்சத்து மற்றும் ஆப்ஷனேற்றங்கள் நிறைந்துள்ளது. பூசணி விதைகள் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை

பூசணி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட பூசணி விதை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயங்களை பெரிதளவு  (Heart Health) குறைக்கிறது.

2. 100 கிராம் பூசணி விதையில் 18 கிராம் நார்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பூசணி விதை வரப்பிரசாதம். அதோடு வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும் பூசணி விதை உதவும்

3. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க, பூசணி விதைகள் உதவும். விந்தணு குறைபாட்டிற்கு துத்தநாக சத்து குறைபாடும் ஒரு காரணம். பூசணி விதைகளில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதால், விந்துக்களின் எண்ணிக்கை மட்டும் அல்லாமல் விந்து சக்தியும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | இந்த பாகங்களில் வலியா? இது கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறியாக இருக்கலாம்... ஜாக்கிரதை!!

4. கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம். ஆரோக்கியமான கொழுப்பு அமிலம், கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளதால் மூட்டு வலி பிரச்சனைகளை போக்க பூசணி விதைகள் உதவும்.

5. நீரிழிவு நோயாளிகளுக்கு பூசணி விதை நன்மை பயக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் பூசணி விதைக்கு உண்டு, ரத்த நாளங்களை தளர்த்தி, இதயத்தில் நட்ட ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கிறது.

7. நார் சத்து அதிகம் கொண்ட பூசணி விதை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளுக்கும் மருந்தாக அமைகிறது.

நாளொன்றுக்கு எந்த அளவு பூசணி விதையை எடுத்துக் கொள்ளலாம்?

அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்று கூறுவார்கள் பூசணி விதையில் எண்ணற்ற நலன்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் தினமும் 5 கிராம் பூசணி விதைகளை உட்கொள்ளலாம். பூசணி விதைகளை வருத்தோ அல்லது வறுக்காமலோ உங்களுக்கு பிடித்த வகையில் சாப்பிடலாம். அல்லது நீங்கள் தயாரிக்கும் கஞ்சிகளில் கலந்து சாப்பிடலாம். நீங்கள் தயாரிக்கும் ஜூஸ்களில் கலந்தும் சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சோர்வு, அதிக தாகம், அதிக பசி... சுகர் லெவல் எகிறும் அறிகுறிகள் இவை: ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News