மூட்டு வலியிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியங்கள்: முழங்கால் மற்றும் மூட்டு வலி பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். பல நேரங்களில் மூட்டு வலி காயம் காரணமாகவோ அல்லது கீல்வாதம் போன்ற பல நோய்களின் காரணமாகவோ ஏற்படலாம். மழை மற்றும் குளிர்காலத்தில் மூட்டு வலி கணிசமாக அதிகரிக்கிறது. ஏற்கனவே மூட்டுவலி அல்லது மூட்டு தொடர்பான ஏதேனும் நோய் உள்ளவர்கள், குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். குளிர் காலத்தில் நிலைமை தீவிரமாகி வலி அதிகரிக்கத் தொடங்குகிறது. மூட்டுவலி இல்லாதவர்கள் கூட குளிர்காலத்தில் மூட்டு வலியினால் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி என்று பார்ப்போம்.
மூட்டு வலிக்கு வீட்டு வைத்தியம்
ஆக்ஸிஜனேற்ற உணவை டயட்டில் சேர்க்கவும்
மூட்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் மீனும் சாப்பிடலாம்.
உடலில் வைட்டமின் டி குறைபாட்டை நீக்கவும்
குளிர்காலத்தில், நீங்கள் உடலின் அனைத்து வகை மூட்டுகளின் ஆரோக்கியத்தை பேண வேண்டும். அதில் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க, உங்களுக்கு நல்ல உணவு மட்டுமல்ல, வைட்டமின் டியும் தேவை. அதனால்தான் தினமும் சிறிது நேரம் வெயிலில் உட்காருங்கள். மாத்திரைகள் மூலம் விட்டமின் டி எடுத்துக் கொண்டாலும், சூரிய ஒளி மிகச்சிறந்த தேர்வாகும்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!
எளிய பயிற்சிகள்
மூட்டு வலி அதிகம் தொந்தரவு செய்தால், நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளும் செய்ய வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் வீட்டிலேயே சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்யலாம். இதைச் செய்ய, நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள். இந்த பயிற்சிகளை மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும். இதனால் நீங்கள் எந்த வகையான பக்க விளைவுகள் அல்லது பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இஞ்சி
இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்..
உலர் பழங்கள்
பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ