Hot Water Drinking Health Benefits: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று யாரேனும் யோசனை கேட்டால், பலர் முதலில் கூறும் முக்கிய யோசனை, ‘சுடு தண்ணீர் குடிங்க..’ என்பதுதான். பலர், வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை மளமளவென குறையும் என நினைக்கின்றனர். இது வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையாகவே வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா? இங்கு பார்க்கலம்லாம் வாங்க.
வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் என்ன நடக்கும்?
காலையில் எழுந்து நாம் என்ன வேலை செய்கிறோமோ, அப்படியே நமது நாளும் அமைவதாக பலர் கூறுகின்றனர். ஒரு சிலர், காலையில் எழுந்தவுடன் தங்களை அந்த நாளுக்காக தயார் செய்து கொள்ள ஒரு கப் காபியை நாடுவர். அதே போல, ஒரு சிலர் குளிர்ந்த நீரை குடிப்பர். ஆனால் உண்மையில் காலையில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆவதோடு மட்டுமன்றி, உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. அதனால், இதுவே தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யும் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
செரிமான சத்தை அதிகரிக்கும்:
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் செரிமான சத்துகல் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுடு நீரில் இருக்கும் வெதுவெதுப்பு, செரிமானத்தை சீர் செய்யும் உடல் பாகங்களுக்கு உந்துதல் அளிக்கும். அது மட்டுமன்றி, உடலில் மெட்டபாலிச சத்துக்களை அதிகரிக்கும் எனர்ஜியையும் வெந்நீர் கொடுக்கிறது. உணவு பாகங்களை சரியான வகையில் செரிமானத்திற்கு உண்டாக்கவும் இது உதவுகிறது. சரியான ஊட்டச்சத்தினை உறிஞ்சு கொள்ளவும் வெந்நீர் உதவுகிறது.
நச்சுக்களை வெளியேற்றும்:
வெந்நீர், இயற்கையான டி-டாக்ஸிஃபையராக விளங்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வெந்நீர் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சரியாக சிறுநீர் வெளியேறவும் வழிவகை செய்கிறது.
நீர்ச்சத்தினை அதிகரிக்கும்:
உடலில் நீர்ச்சத்து இருப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், உங்கள் உடலில் நீங்கள் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்கிறீர்கள். உடலில் நீர்ச்சத்துடன் இருப்பதால் உடல் சரியாக இயங்க உதவும். அறிவாற்றல் மேம்பட்டு, உடல் சூடும் சம நிலையில் இருக்கும்.
மேலும் படிக்க | எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மூக்கடைப்பு..
மூக்கடைப்புடனோ அல்லது சளியுடனோ நீங்கள் காலையில் எழ நேரிட்டால் உடனடியாக வெந்நீர் அருந்துவது நல்லது. இது, மூக்கடைப்பில் இருந்து தற்காலிக ஆதரவு கொடுக்கும். வெந்நீரில் இருந்து வரும் ஆவி, உங்கள் மூக்கில் உள்ள சளியை நீக்க உதவும். இதனால் சரியாக சுவாசிக்கவும் முடியும்.
உடல் எடை பராமரிப்பு:
உடலை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடல் எடையை சரியாக பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சுடு தண்ணீர் வரபிரசதம் என்றே கூற வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், பசியின்மை நீங்குகிறது. இது, உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தருகிறது. இதனால், நீங்கள் சாப்பிடும் போது அதிக உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கலாம். சிலர், காலையில் எழுந்தவுடன் நேரடியாக காலை உணவில் கை வைத்து விடுவர். அப்படி சாப்பிடும் போது அவர்கள் அதிகமாக சாப்பிட கூடும். அதிகமாக சாப்பிடாமல் தவிர்க்க, காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பது நல்லது. அது மட்டுமன்றி வெந்நீர் உங்களை சுறுசுறுப்பாகவும் இயங்க உதவும். கொழுப்பை குறைத்து உடலுக்கு தேவையான சத்துக்களையும் தருகிறது, வெந்நீர்.
மேலும் படிக்க | நுரையீரலை வஜ்ரம் போல் வலுவாக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்..!!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ