உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 7 நன்மைகள்! சாக்கு போக்கு சொல்லாம உடனே பண்ணுங்க..

நம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால், தினசரி உடற்பயிற்சி செய்வதை நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2024, 03:38 PM IST
  • தினசரி வர்க் அவுட் முக்கியம்
  • உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்
  • வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 7 நன்மைகள்! சாக்கு போக்கு சொல்லாம உடனே பண்ணுங்க.. title=

தினசரி உடற்பயிற்சி செய்து பழகுவது, ஒரு மனிதரின் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் என்கின்றனர் மக்கள். இது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுவது மட்டுமன்றி, வாழ்வை பல்வேறு வகையில் மாற்றுவதற்கும் உதவும். மன சோர்வில் இருக்கும் ஒருவரின் வாழ்வை பாசிடிவாக மாறவும், உடல் பருமனுடன் இருக்கும் ஒருவருக்கு எடையை குறைக்கவும் உதவும். 

1.மூளை செயல்பாடு மேம்படும்:

தினமும்  உடற்பயிற்சி செய்வது நம்மை புத்திசாலியாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது குறித்து நடத்தப்பட்டிருக்கும் மருத்துவ ஆராய்ச்சிகளில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதால், நமது நினைவு திறன் அதிகரிக்கும் என்றும், நமக்கு கற்றல் திறன் அதிகரிக்கும் என்றும் அந்த மருத்துவ ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

2.நல்ல தூக்கம்:

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள்? அப்போது உங்களுக்கு உடற்பயிற்சி செய்வது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தி தரும் பழக்கமாக இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் நமது தூக்க நேரத்தை நீட்டிக்கலாம், தடையற்ற தூக்கத்தையும் பெறலாம். இது குறித்து வெளியாகியுள்ள மருத்துவ ஆய்வுகளில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஆழ்ந்து தூங்குவார்கள் என்றும், காலையில் புத்துணர்ச்சியுடன் உணர்வார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

3.நோயெதிர்ப்பு சக்தி:

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது, நமது உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்க, உடலில் இருக்கும் பிரச்சனைகளை போக்க தினமும் உடற்பயிற்சி செய்யலாம். நோயை ஏற்படுத்தும் கிருமிகளை உடலில் தங்கவிடாமல் தடுப்பதற்கு, உடற்பயிற்சி பெரிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. 

4.இருதய ஆரோக்கியம்:

உடற்பயிற்சி செய்வது நமது இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதோடு சேர்த்து, இதயத்தையும் பாதுகாக்கிறது, தினசரி உடற்பயிற்சி. ரத்த அழுத்தம் குறைதல், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல் ஆகிய விஷயங்கள், தினசரி உடற்பயிற்சிகளால் நடைபெறுகிறது. வாரம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வதால், நாம் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

5.எடையை பராமரிக்க உதவுகிறது:

தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, எடையை பராமரிப்பது. கலோரி எரிப்பு, தசை வளர்ப்பு மற்றும் ஆரோக்கிய எடை ஏற்றத்திற்கு உதவுகிறது உடற்பயிற்சி. இதனுடன் சேர்த்து டயட்டும் இருந்தால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் வெற்றி பெறலாம். அது மட்டுமன்ரி, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது. இது, ஒட்டுமொத்த உடல்நலனையும் பார்த்துக்கொள்ளவும் உதவும். 

6.உடல் ஆற்றல்:

ஒரு சிலருக்கு, காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை எப்போதும் சோர்வான உணர்வே இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வது நம் உடலை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவுமாம். சோர்வு உணர்வையும் விரட்டியடிக்க உதவுகிறது, தினசரி உடற்பயிற்சி. 

7.பாசிடிவான எண்ணங்கள்:

பலருக்கு தன் வாழ்வில் என்ன நடந்தாலும் அதனால் முழு மனதுடன் மகிழ்ச்சியடைய முடியாமல் இருக்கும். அவர்கள், தினமும் உடற்பயிற்சியை செய்து பார்க்கலாம். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் மன சோர்வு, பதற்றம் ஆகியவற்றை உடற்பயிற்சி குறைக்க உதவும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு, தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்தாலே போதுமானதாகும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News