இன்றைய பிசியான உலகில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இன பல தரப்பினரும், காலை உணவை தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கேட்டால் நேரமில்லை என்ற பதில் தான் வரும். ஆனால் காலை உணவு தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள், மிக மோசமான ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியவில்லை.
நேரமே இல்லை என்று, ஒரு டம்ளர் பால் அருந்திவிட்டு, காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளால், வகுப்பில் நடத்தும் பாடங்களில், சரியாக கவனம் செலுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள், இரண்டு மணி நேரத்திற்குள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். ஒரு நாளில் மிக அதிக இடைவெளிக்கு பின் இன்னும் உணவு காலை உணவு மட்டுமே. ஏனென்றால், இரவு உணவு சாப்பிட்ட பின், கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு பிறகு தான் நம் காலை உணவை சாப்பிடுகிறோம். அதனால்தான் அதற்கு பிரேக் பாஸ்ட் என்று கூறுகிறோம். அதாவது விரதத்தை முடிக்கிறோம் என்று அர்த்தம்.
காலை உணவுக்கான தேர்வு மிக சிறந்ததாக இருக்க வேண்டும். காலை உணவிற்கு இட்லி மிகவும் சிறந்தது. அதே போல் பொங்கல், காய்கறி சேர்த்த உப்புமா வகைகள் ஆகியவை சமச்சீரான சத்துக்கள் நிறைந்தவை. இட்லி தோசை போன்றவை சிறந்த ப்ரோபயோடிக் உணவுகள். இவை குடல் ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்தக் கூடியவை. காய்கறிகள் சேர்த்த சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்ந்து இட்லி தோசையை சாப்பிடும் போது, குழந்தைகளுக்கு ஒரு சமச்சீரான உணவு கிடைக்கிறது. அவர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. ஆற்றல் குறையாமல் இருந்தால் தான் இந்த போட்டி மிகுந்த உலகில், நம்மால் சாதிக்க முடியும்.
மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை இருக்கா... ‘இந்த’ உணவுகளில் இருந்து தள்ளியே இருங்க...!
குடும்பத் தலைவிகளை எடுத்துக் கொண்டால், காலையில் அவசரத்தில், குழந்தைகளுக்கும் கணவருக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த பிறகு, ஒரு காபி அல்லது டீ அருந்திவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்த பின், நேரடியாக சாப்பாடு சாப்பிடும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், நாளடைவில் அவர்களுக்கு ரத்த சோகை போன்றவை ஏற்பட்டு, பலவீனமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வேலைக்கு, செல்பவர்களை எடுத்துக் கொண்டால், வேகவேகமாக சமையல் செய்துவிட்டு, டிபன் பாக்ஸில் உணவை எடுத்துக் கொண்டு சென்றாலும், பெரும்பாலும் சாப்பிட நேரம் கிடைக்காமல், டீ குடித்துவிட்டு, நேரடியாக மதிய உணவை சாப்பிடுவார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவு என்பது மிக மிக அவசியம். அது அன்றைய நாளுக்கான எரிபொருளை நிரப்புவது போன்றது. நம் நாள் முழுவதும் ஆற்றலுடன், புத்துமுயற்சியுடன் சுறுசுறுப்பாக இருக்க காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவை தவிர்த்தால், ரத்த சோகை, பலவீனம், உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் வந்து சேரும். எனவே ஆரோக்கியமான காலை உணவு உடன் நாளை தொடக்கவும். காய்கறிகள், பருப்பு, உலர் பழங்கள், ஃப்ரெஷான பழங்கள், முழு தானியங்கள் ஆகியவை காலை உணவுக்கான சிறந்த தேர்வுகள்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! மீன் உணவுகளுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ