நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் உடல் நலனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

வியர்வை எப்போது ஏற்படும் என்ற கேள்விக்கு எல்லோரிடம் விடை இருக்கும், ஆனால், வியர்வை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பலரிடம் பதில் இருப்பதில்லை

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2021, 12:27 AM IST
  • வியர்வை (Sweating) என்பது ஒரு சாதாரண உடல் செயல்பாடு தான். இதற்கு இரண்டு வகையான சுரப்பிகள் (Glands) காரணம்.
  • அக்குள் போன்ற சில உடல் பாகங்களில், வியர்வை அதிகமாக இருக்கும்.
  • அபோக்ரைன் சுரப்பிகள் (apocrine glands) வியர்வையை உருவாக்குகின்றன.
நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் உடல் நலனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!! title=

வியர்வை (Sweating) என்பது ஒரு சாதாரண உடல் செயல்பாடு தான். இதற்கு இரண்டு வகையான சுரப்பிகள் (Glands) காரணம். 

வியர்வை எப்போது ஏற்படும் என்ற கேள்விக்கு எல்லோரிடம் விடை இருக்கும். கடினமாக உழைக்கும் போது, அதிக வெயில் இருந்தாலோ அதிக வியர்வை ஏற்படுகிறது என எல்லோரும் உடனேயே கூறி விடுவார்கள்.

ஆனால், வியர்வை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பலரிடம் பதில் இருப்பதில்லை.

சில காரணங்களால், அதாவது அதிக அளவில் உடல் உழைப்பு, உடல் பயிற்சி, பயம், பதற்றம், கவலை, அதிக வெயில் ஆகியவை காரணமாக, நமது உடல் வெப்பம் அதிகமாகிறது. அந்த நேரத்தில் நமது மூளை செயல்புரிந்து, உடல் வெப்பத்தை சீராக்க, லட்சக்கணக்கான எக்ரின் சுரப்பிகள்  (Eccrine glands) வழியாக உடல் முழுவதும் தண்ணீரை வெளியிடுகிறது. அது தான் வியர்வை. இதனால் உடலின் வெப்பநிலை சீராகிறது.

அக்குள் போன்ற சில உடல் பாகங்களில், வியர்வை அதிகமாக இருக்கும். இங்கே அபோக்ரைன் சுரப்பிகள் (apocrine glands) வியர்வையை உருவாக்குகின்றன. இதன் மூலம் ஒரு பாக்டீரியா  உருவாகிறது. இதனால் அது போன்ற உடல் பாகங்களில் வியர்க்கும் போது, அந்த வியர்வை நாற்றம் அடிக்கிறது

ALSO READ | இரவில் பருப்பு உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்கு தான்..!!

அக்ரின் சுரப்பிகளைப் போலவே, உடற்பயிற்சியின் போது அபோக்ரீன் சுரப்பிகளும் சுரக்கும்.  நாம் ஒரு உணர்ச்சி ரீதியாக, அமைதியற்ற மன நிலை அல்லது உற்சாகமான மன நிலையில் இருக்கும்போது கூட அப்போக்ரைன் சுரப்பிகள் செயல்படுகின்றன. இருந்தாலும், உடல் கடின உழைப்பினால், உடல் பயிற்சியினால் ஏற்படும் வியர்வையில்  நாற்றம் இருக்காது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

எனினும் வியர்வை அசாதாரணமான சூழ்நிலையில் ஏற்பட்டால், எச்சரிக்கை தேவை. இதய பிரச்சினை காரணமாக, வியர்வை நிறைய வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அசாதாரண வியர்வை இருந்தால் மருத்துவரை சந்திக்கவும்.  

வியர்த்தல் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது பல காரணிகளைப் பொறுத்தது. உதாரணமாக, அதிக எடை மற்றும் பருமனான மக்களுக்கு அதிக வியர்வை இருக்கும். இது தவிர, வயது, உடலில் உள்ள தசைகளின் அளவு, உடல்நலக் காரணங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலை போன்ற பல காரணிகள் உள்ளன, இதன் காரணமாக வியர்த்தலின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

ALSO READ | உலகின் மருத்துவ மையமாக திகழும் இந்தியா: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பாராட்டு
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News