Benefits of healthy breakfast: ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். முளை கட்டிய பயறுகள், வேகவைத்த முட்டை, உளுத்தம் பருப்பு, சோயாபீன் போன்ற புரதங்களை உங்கள் உணவில் முடிந்தவரை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று உணவியல் நிபுணர்கள் டாக்டர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கிறார். இதனால் பசி குறைவதுடன், நாள் முழுவதும் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.
புரோட்டீன் நிறைந்த இந்த உணவுகளை காலை உணவுக்கு சாப்பிடுங்கள்
1. காலை உணவில் முட்டை
உணவியல் நிபுணர்கள் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், தினமும் காலை உணவில் முட்டைகளை உட்கொள்வதன் மூலம், பல நோய்களைத் தடுக்கும் சக்தியை உடல் தக்க வைத்துக் கொள்கிறது என்கிறார். ஏனெனில் முட்டையில் அதிக புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையில் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகளுக்கு நன்மை பயக்கும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம், நாள் முழுவதற்க்ய்ம் தேவையான வைட்டமின் டி உங்களுக்கு கிடைக்கும்.
ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
2. காலை உணவில் ஊறவைத்த பாதாம் பருப்பு
காலை உணவில் பாதாம் சேர்த்துக்கொள்ளலாம். இது பல ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்தது. ஊறவைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பாதாமில் அத்தியாவசிய வைட்டமின்கள், மாங்கனீஸ், புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியம். எனவே, தினமும் காலை உணவில் சிறிதளவு பாதாமை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3. காலை உணவில் வேர்க்கடலை
காலை உணவில் வேர்க்கடலை சாப்பிடுவது நன்மை பயக்கும். இதற்கு இரவில் தூங்கும் முன் கடலையை தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள். பொட்டாசியம், தாமிரம், கால்சியம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற பண்புகள் நிறைந்த நிலக்கடலையை ஊறவைத்து சாப்பிடுவதால் அதன் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளை பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.
ALSO READ | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்..!!!
4. காலை உணவில் தயிர்
ஒவ்வொருவரும் கண்டிப்பாக காலை உணவில் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டயட் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங். தயிர் நமது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. காலை உணவில் தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதுடன் உங்கள் செரிமானமும் நன்றாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. )
ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR