Curry Leaves Benefits: இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது

கறிவேப்பிலையை நாம் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்துகிறோம். இவற்றை தவிர, நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2022, 03:02 PM IST
  • கறிவேப்பிலையின் நன்மைகள்.
  • முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை.
  • கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்.
Curry Leaves Benefits: இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது title=

கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். இவற்றை தவிர, கறிவேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில் தான் நன்மைகளை பற்றி பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
தற்போது பெரும்பாலான மக்கள் தங்கள் எடையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க மக்கள் பல டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், உணவின் சுவையை அதிகரிக்கும் கறிவேப்பிலை, உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க | ரத்தம் நீர்த்து போக வைட்டமின் கே காரணமா? ஆனால் எலும்பு பலமா இருக்க இதுதானே காரணம்

நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான வியாதியாக மாறிவிட்டது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அல்லது நீங்களே நீரிழிவு நோயாளியாக இருக்கலாம். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள். இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உடலில் இருக்கும் இன்சுலினை பாதித்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

செரிமான பிரச்சனையில் பயனுள்ளதாக இருக்கும்
நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் தொல்லையடைந்தால், கருவேப்பிலை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கருவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் செரிமான பிரச்சனை நீங்கும். இதன் பயன்பாடு வயிற்றை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமின்றி, செரிமானக் கோளாறுகளையும் குணப்படுத்தும்.

இதய நோய்களுக்கு நன்மை தரும்
உணவை சுவையாக மாற்றும் கறிவேப்பிலை, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த குணம் இருப்பதால், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும். உண்மையில், கருவேப்பிலை உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது, இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

தோல் பிரச்சனைகளில் நன்மை பயக்கும்
தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கறிவேப்பிலை மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக பருக்கள் அல்லது முகத்தின் வறட்சி பிரச்சனையால் சிரமப்பட்டு இருந்தால், தினமும் கறிவேப்பிலையை சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனுடன் ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவுவதும் நல்ல பலனைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News