பலர் தங்களுக்கு இப்போது அதிக வருமானம் இல்லாததால் முதலீடு செய்ய முடியவில்லை என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். ஆனால் ரூ.10-20 சேமிப்பில் கூட பெரிய அளவில் நிதியை திரட்டலாம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை... இல்லையா... ஆனால், இது தான் உண்மை. இன்று கோடீஸ்வரனாக ஆவதற்கு சரியான திட்டமிடல் மட்டுமே இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் கோடீஸ்வரராக வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தால், அதற்கான நேரம் வந்துவிட்டது, இந்த புத்தாண்டில் முதல் அடியை எடுங்கள்.
கோடீஸ்வர கனவு நனவாக செய்ய வேண்டியவை
கோடீஸ்வரர் ஆக, சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை. சரியான இடத்தில் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே உங்கள் இலக்கை அடைய முடியும். முதலீடு தொடங்க பெரிய தொகை தேவையில்லை. சிறிய தொகையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
தினமும் 10-20 ரூபாய் சேமிப்பிலும் கோடீஸ்வரர் ஆகலாம்
தினசரி 10-20 ரூபாய் சேமிப்பதன் மூலம் எவரும் கோடீஸ்வரராகலாம். இதற்கு நீண்ட கால முதலீடு மட்டுமே தேவை. தினமும் ரூ.10 சேமித்தால், ஒரு மாதத்தில் ரூ.300 ஆகிவிடும். இதனை மியூச்சுவல் ஃபண்டில் SIP முறையிஉல் முதலீடு செய்யவும். 35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 300 எஸ்ஐபி செய்து, அதில் 18% வருமானம் பெற்றால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் ரூ.1.1 கோடி கிடைக்கும்.
மாதமும் ரூ.1,000 - ரூ.2000 முதலீடு
இன்று அனைவராலும் மாதம் 1,000-2,000 ரூபாய் சேமிக்க முடியும். ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் கூட நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் இலகுவாக கோடீஸ்வரர் ஆகலாம்.
இளம் வயதில் முதலீட்டை தொடங்குதல்
இளம் வயதிலேயே முதலீட்டை தொடங்குவதால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு எளிதாக இலக்கு இருக்கும் என்பதும் முற்றிலும் உண்மை. மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP மூலம் பெரிய இலக்குகளை அடையலாம். 20 வயது இளைஞன் தினமும் ரூ.30க்கு எஸ்ஐபி செய்ய முடிந்தால், ஓய்வுபெறும் போது அதாவது 60 வயதுக்குப் பிறகு 12 சதவீத வருமானம் கிடைத்தால் கூட ரூ.1.07 கோடி நிதி திரட்டலாம். இந்த காலகட்டத்தில் ரூ.4,32,000 மட்டுமே முதலீடு செய்திருப்பீர்கள்.
மேலும் படிக்க | மக்களே கவனம்! அதிக வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? RBI முக்கிய அறிவிப்பு
10 முதல் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
10 முதல் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக, ஒவ்வொரு மாதமும் முதலீட்டுப் பணத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய்க்கு SIP தொடங்க வேண்டும். பின்னர் வருமானத்திற்கு ஏற்ப முதலீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 15 சதவீத வருமானம் கிடைக்கும் நிலையில் கோடீஸ்வரன் ஆகலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு
கடந்த இரண்டு தசாப்தங்களில், பரஸ்பர நிதிகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளன. இதை விட அதிகமாக எதிர்பார்ப்பது நேரடியாக ஈக்விட்டியில் முதலீடு செய்வதன் மூலம் சாத்தியமாகும். ஆனால் ரிஸ்க் அதிகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய அனுபவம் தேவை. பரஸ்பர நிதிகளில் SIP செய்வது அனைவருக்கும் எளிதானது, ஏனெனில் இங்கு முதலீடு செய்ய பெரிய தொகை தேவையில்லை. மாதம் 500 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். பின்னர் வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டை அதிகரிக்க முடியும்.
பங்குச் சந்தையில் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அதில் பெரும் பகுதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றன. ஆனால் இதற்காக ஒரு நிபுணர் குழு இருக்கும். அவர்கள் சந்தையில் ஏற்ற இறக்கங்களை சரியாக கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்காக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. குறிப்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த முதலீட்டுத் தேர்வாகும்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ