Ayurvedic Drinks for Heart Health: மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு குறித்த செய்திகளை நாம் தினமும் கேட்கிறோம். முதியவர்களை விட இளையவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் ரத்த ஓட்டத்தை இயற்கையாகவே அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நல சிக்கல்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும் சில ஆயுர்வேத பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஆயுர்வேத பானங்களை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம், ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.
மஞ்சள் பால்
மஞ்சள் பால், உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குர்குமின் நிறைந்த மஞ்சள், பாலுடன் சேர்ந்து, இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். ஒரு கப் சூடான பாலில், சுத்தமான மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு கரு மிளகு பொடி சேர்த்து, சிறிது கொதிக்க வைத்து அருந்துவதால், இதய நோய்கள் (Heart Health Tips) மட்டுமல்ல, நுரையீரலும் வலுப்படும். தூக்கமின்மை பிரச்சனையும் நீங்கும். இரவு படுக்கச் செல்லும் முன் இந்த பாலை அருந்துவது சிறந்தது.
இஞ்சி டீ
காலையில், வெறும் வயிற்றில் இஞ்சி டீ அருந்துவது, இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ரத்த உறவை தடுப்பதோடு, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இஞ்சியை நன்றாக துருவி, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு, அதனை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது மிகவும் பலனளிக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும்.
இலவங்கப்பட்டை டீ
ஆயுர்வேதத்தில், லவங்கப்பட்டை மசாலா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மருத்துவ குணத்தை கொண்டுள்ள இந்த மசாலா, ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவும். லவங்கப்பட்டையை முடிந்த அளவு பொடி செய்து தண்ணீரில் போட்டு, அதில் சிறிது மஞ்சளும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்துவது சிறந்த பலன்களை கொடுக்கும்.
பீட்ரூட் சாறு
ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பீட்ரூட், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி படைத்தது. ரத்த நாளங்களை விரிவு படுத்தி, அடைப்புகளை நீக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது. தினமும் காலை பிரெஷான பீட்ரூட்டில் தயாரிக்கப்பட்ட ஜூசை அருந்துவது, இதய நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க உதவும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. சுமார் 100க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் இருப்பதாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த ஆயுர்வேத மூலிகையாக கருதப்படும் நெல்லிக்காய், ரத்தம் உறைவதை தடுத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். இதய நோய்கள் அண்டாமல் இருக்கும்.
அஸ்வகந்தா டீ
சிறந்த ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தா, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதோடு, அழுத்தத்தையும் போக்கும். அஸ்வகந்தா தேநீர், மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்து, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. அஸ்வகந்தா டீ , அஸ்வகந்தா வேர் பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும்.
துளசி தேநீர்
ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துளசி, சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று. இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட துளசி, மரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கும். துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை வடிகட்டி அருந்துவதால், இதய நோய்கள் அண்டாமல் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், உடல் பருமன் குறைதல் போன்ற எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | டின்னர் டிப்ஸ்... செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்ல நீங்கள் செய்ய வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ