கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து காணப்படும் இருமல், சில சமயங்களில் காய்ச்சலுடன் இருப்பது இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H3N2 காரணமாகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக பரவலான புழக்கத்தில் உள்ள H3N2, மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக மருத்துவமனையில் அடையாளம் காணப்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மறுபுறம், நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கண்மூடித்தனமாக ஆண்டிபயாடிக்ஸை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (IMA) அறிவுரை கூறியுள்ளது.
மேலும் படிக்க | இதை செய்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை!
ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிக்கும்
காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் ஆண்டிபயாடிக்ஸ் நிலைக்குழு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இது பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சலுடன் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது என்று அது கூறியது.
தேவையான நேரத்தில் பயன்படாது
மருத்துவர்கள் அறிகுறி சிகிச்சையை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஆண்டிபயாடிக்ஸை பரிந்துரைக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. "இப்போதே, மக்கள் அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்லாவ் போன்ற ஆண்டிபயாடிக்ஸை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள். அதுவும் டோஸ் மற்றும ப்ரிகுவன்சி பற்றி கவலைப்படாமல், உடல் நன்றாக உணர ஆரம்பித்தவுடன் அதை நிறுத்துகிறார்கள். இது ஆண்டிபயாடிக் தடைக்கு வழிவகுக்கும் என்பதால் இதை நிறுத்த வேண்டும். ஆண்டிபயாடிக்கின் பயன்பாடு தேவைப்படும்போது, அது முழுவதுமாக தடைபட வாய்ப்புள்ளது. இதுபோன்றவற்றால் தேவையான நேரத்தில் ஆண்டிபயாடிக் மொத்தமாக தடைப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amoxicillin, Norfloxacin, Oprofloxacin, Ofloxacin, and Levofloxacin ஆகியவை மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸ். வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்று (UTI) சிகிச்சைக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. "கோவிட் காலத்தில் Azithromycin and Amoxiclav பரவலாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இதுவும் முழுமையான தடைக்கு வழிவகுக்கும். ஆண்டிபயாடிக்களை பரிந்துரைக்கும் முன் தொற்று பாக்டீரியா இல்லையா என்பதைக் கண்டறிவது அவசியம்," என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஆண்களின் கவனத்திற்கு! வழுக்கையை போக்கும் ‘சில’ அற்புத எண்ணெய்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ