உடல் கொழுப்பை கரைக்க அதிக தசைகள் தேவைப்படுகின்றன. வலுவான தசைகள் இருப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதிக புரதம் சாப்பிடுவதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், தசை வலுவாக தொடங்குகிறது மற்றும் உடல் இளைக்கத் தொடங்குகிறது. நீங்கள் தசையை வலுவாக்க முயற்சிப்பவராக இருந்தாலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர் என்றாலும், அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவு சிறந்த தேர்வாக இருக்கும். இவை தசை மற்றும் திசுக்களை உருவாக்கி உடலை கட்டமைக்க உதவுகின்றன. அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவு எடை இழப்புக்கான சிறந்த உனவாக கருதப்படுகிறது. அதிக புரோட்டீன் காலை உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எடை இழப்பிற்கான உயர் புரத காலை உணவு
பாசிப்பருப்பு தோசை
பாசிப்பருப்பு தோசை புரதம் நிறைந்துள்ளது. அதிலும் முளை விட்ட பாசிப் பருப்பு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. பாசிப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து, தேசை தயாரித்தால், மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி நல்ல தேர்வாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்தை (Health Tips) வழங்கும் பாசிபருப்பு தோசை சிறந்த தேர்வாக இருக்கும்.
பன்னீர் பரோட்டா
பனீர் புரதத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் வெவ்வேறு வழிகளில் சாப்பிடலாம். காலை உணவிற்கு பன்னீர் ஸ்டஃப் செய்த பராட்டா புரத சத்தினை வழங்கும் சிறந்த உணவாகும். பனீர் ஸ்டஃப்டு ரொட்டி, பனீர் மற்றும் சப்பாத்தியுடன், காய்கறிகள் கலந்த பன்னீர் ஸைட் டிஷ் அல்லது பனீர் சாண்ட்விச் ஆகியவற்றையும் காலை உணவாக உண்ணலாம்.
மேலும் படிக்க | இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை! யாரெல்லாம் இஞ்சியை அதிகமா சாப்பிடக்கூடாது?
சோயா உப்புமா
சோயாபீன், சோயா பால் மற்றும் டோஃபு அனைத்திலும் புரதம் நிறைந்துள்ளது. சோயா உப்புமா செய்ய சோயா துண்டங்களைப் பயன்படுத்தலாம். சோயா சங்க்ஸை தண்ணீரில் ஊறவைத்து, மசாலா மற்றும் காய்கறிகளுடன் தாளித்து உப்புமா செய்யலாம்.
முட்டை உணவு
புரோட்டீன் நிறைந்த முட்டைகளை காலை உணவாகவும் சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து வேக வைத்த முட்டைகளை சேர்த்து உனவு தயாரிக்கலாம் . மசாலாவை அதிகல் சேர்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் விரும்பினால், வேகவைத்த முட்டைகளையும் சாப்பிடலாம் அல்லது முட்டை ஆம்லெட்டையும் காய்கறிகளை சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஆயுளை நீட்டிக்கும் நார்ச்சத்து! கரையாத நார்ச்சத்தும் கரையும் ஃபைபர் சத்தும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ