Home Remedies For Arthritis: மூட்டுவலியை ஒழித்து கட்ட... நீங்கள் செய்ய வேண்டியவை!

கீல்வாதத்தால் பாதிக்கப்படும் போது மூட்டு வலியில் இருந்து விடுபட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சில உள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2023, 04:11 PM IST
  • கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்.
  • மூட்டுவலி அறிகுறிகளை இயற்கையாக நிர்வகிக்க உதவும்.
  • கீல்வாதத்தின் அறிகுறிகளை நிர்வகிப்பதற்கான வீட்டு வைத்தியம்.
Home Remedies For Arthritis: மூட்டுவலியை ஒழித்து கட்ட... நீங்கள்  செய்ய வேண்டியவை! title=

கீல்வாதம் என்பது ஒரு நாள்பட்ட உடல் பாதிப்பு நிலை, இது முதன்மையாக மூட்டுகளை பாதிக்கிறது மற்றும் மூட்டுகளில் வலி, விறைப்புத் தன்மை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. முதுமை, காயம், தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இது ஏற்படலாம். கீல்வாதத்தை வேர்களில் இருந்து முற்றிலும் குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், அதன் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்கவும், கீல் வாதத்தால் பாதிக்கப்படும் போது மூட்டு வலியில் இருந்து விடுபட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சில உள்ளன.

மூட்டு வலியில் இருந்து விடுபடுவதற்கான இந்த வாழ்க்கை முறை மாற்றங்களில், மிக முக்கியமாக ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் வெப்ப மற்றும் குளிர் சிகிச்சையைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். கீல்வாதம் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க உதவும் பல இயற்கை வைத்தியங்களும் உள்ளன.

மணிபால் மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர் ராஜேஷ் குமார் வர்மா (ஆலோசகர் - எலும்பியல்), உங்கள் மூட்டுவலி அறிகுறிகளை இயற்கையாக நிர்வகிக்க உதவும் ஏழு வீட்டு வைத்தியங்களைப் பற்றி விளக்குகிறார்.

கீல்வாதத்தின் அறிகுறிகளை நிர்வகிப்பதற்கான வீட்டு வைத்தியம்:

கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சமச்சீர் உணவுகள்

கீல்வாதம், மூட்டி வலியில் இருந்து விடுபட உங்கள் உடல் போதுமான அல்லது போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது மிகவும் முக்கியம். இது நல்ல எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்காக, கால்சியம் நிறைந்த உணவுகளான பால், ப்ரோக்கோலி மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்களை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இதனால், தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்ளவும்.

புரதம் நிறைந்த உணவுகள்

இறைச்சிகள், மீன், பருப்பு மற்றும் கொட்டைகள் போன்ற நல்ல தரமான புரதங்களை உட்கொள்வது மூட்டு திசு பராமரிப்பு மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடலைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான மூட்டுகளை பராமரிக்க உதவும் முக்கியமான கட்டுமானத் தொகுதிகளாக புரதங்கள் செயல்படுகின்றன.

மேலும் படிக்க | தொப்புளில் எண்ணெய் வைத்தால் ‘இந்த’ பிரச்சனைகள் நீங்கும்..! ட்ரை பண்ணி பாருங்க..!

குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கார்போ ஹைட்ரேட் உள்ள உணவுகள்

உடலில் வீக்கத்தைத் தவிர்ப்பதற்காக, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதைக் குறைப்பது முக்கியம். இந்த கூறுகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதம் மூலம் உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கீல்வாதம் தொடர்பான அழற்சியின் அபாயத்தை குறைக்கிறது. ஏனெனில் உடல் பருமன் இருந்தால், மூட்டு வலியில் இருந்து நிவரணம் கிடைக்காது.

வழக்கமான உடற்பயிற்சிகள்

உங்கள் தினசரி நடைமுறைகளில் சாதாரணமாக, உங்களால் முடிந்த அளவில் உடற்பயிற்சிகளை செய்யவும். இதன் மூலம் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வெகுவாகக் குறைக்கலாம். 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மூட்டு ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சமரசம் செய்யக்கூடிய அளவிலான தீவிர விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.

வழக்கமான நடைபயிற்சி

மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய பயிற்சிகளில் ஒன்று நடைபயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 8,000 அடிகள் என்ற இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது மூட்டுகளை நெகிழ்வாக வைத்திருக்கவும் கீல்வாதத்தைத் தடுக்கவும் உதவும்.

அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்

குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றில் சிலருக்கு மூட்டுவலி போன்ற பிற நோய்களும் ஏற்படுகின்றன. இந்த பழக்கங்களை கட்டுப்படுத்துவது அல்லது கைவிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கீல்வாதத்தின் அபாயத்தையும் குறைக்கும். ஏனெனில் அதிக அளவிலான மதுபானம் உடலில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி,  எலும்புகளை பலவீனமாக்கும்.

எடை மற்றும் மன அழுத்தம் மேலாண்மை

மூட்டு ஆரோக்கியம் சரியான எடையை பராமரிப்பதில் உள்ளது. அதிக எடையுடன் இருப்பது உங்கள் எலும்புகளை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தலாம். இதனால் உங்களுக்கு மூட்டு வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், நாள்பட்ட மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். ஏனெனில் இது உடலில் வீக்கம் ஏற்படலாம். இது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடிக்கடி சுடு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News