பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்: பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடிக்கடி வலி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தான நோயாகும். மலச்சிக்கல் இருந்தால், தாங்க முடியாத வலி ஏற்படும். சில சமயங்களில் ஆசனவாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கும். இது பைல்ஸ் நோயின் மிகவும் ஆபத்தான நிலை. பல நேரங்களில் நாம் பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது அதனை தீர்க்காமல் புறக்கணிக்கிறோம். அதனால் பிரச்சனை மிகவும் தீவிரமடைகிறது. இது பைல்ஸ் விஷயத்தில் சரியாக பொருந்தும். அதிலிருந்து விடுபட, பின்னர் சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். இது மிகவும் வேதனையானது. சிலர் நீண்ட காலத்திற்கு விலையுயர்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. உங்கள் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்கள் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட பெரிதும் உதவும் என்பதை அறிந்தால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
பைல்ஸிற்கான வீட்டு வைத்தியம்
மஞ்சள் தூளுடன் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தவும்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டின் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி பைல்ஸ் பிரச்சனையை அகற்றும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூள் கலந்து பைல்ஸ் உள்ள இடத்தில் தடவினால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
நெய் மற்றும் மஞ்சள் நிவாரணம் தரும்
நெய் பொதுவாக எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பைல்ஸுக்கு எதிராக ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது . சிறிதளவு நெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பைல்ஸ் பிரச்சனையை போக்க உதவும். நெய் மற்றும் மஞ்சள் கலவையை பைல்ஸ் உள்ள இடத்தில் தினமும் தடவினால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் பைல்ஸ் பிரச்சனை நீங்கும்.
கருப்பு உப்பு மற்றும் ஆட்டு பால்
பைல்ஸ் பிரச்சனைக்கு ஆட்டு பால் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது, ஆட்டுப்பாலில் கருப்பு உப்பு கலந்து ஒரு சிறிய ஸ்பூன் மஞ்சளையும் சேர்த்துஉட்கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ