வேகமா எடை குறைக்க சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க.. ஈசியா குறைக்கலாம்

Weight Loss Tips: சியா விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2024, 01:34 PM IST
  • குளிர்காலத்தில் காலை உணவாக பாலுடன் சியா விதைகளை கலந்து சாப்பிடலாம்.
  • இதற்கு ஓட்ஸ் மற்றும் சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • காலையில் எழுந்ததும் இந்தக் கலவையை சூடாக்கி அதனுடன் தேன் மற்றும் பழங்களைச் சேர்த்து சாப்பிடலாம்.
வேகமா எடை குறைக்க சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க.. ஈசியா குறைக்கலாம் title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பலரை வாட்டி வதைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இதனால் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்ககும் மோசமான வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிப்பிற்கு பெரும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவது, எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, என எந்த ஒரு முறையும் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதால், பல முறை பலருக்கு எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் பல நோய்களுக்கும் ஆளாகிறீர்கள். அதுமட்டுமின்றி உடலில் உப்பசமும் ஏற்படுகின்றது. 

சியா விதைகள்

சியா விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சியா விதைகள் (Chia Seeds) செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடை இழப்புக்கும் உதவியாக இருக்கும். குளிர்காலத்தில் இதை உட்கொள்வதன் மூலம், எடையை விரைவாக குறைக்கலாம். இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொழுப்பு குறையும். குளிர்காலத்தில் (Winters) எளிதாக உடல் எடையை குறைக்க நினைத்தால், இந்த 5 வழிகளில் சியா விதைகளை உட்கொள்ளுங்கள்.

எடை இழப்புக்கு சியா விதைகளை எவ்வாறு உட்கொள்வது (Chia Seeds For Weight Loss): 

எடை இழப்புக்கு (Weight Loss) சியா விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சியா விதைகள் விரைவான எடை இழப்புக்கு உதவுகின்றன. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக இதை உட்கொண்டால், நீண்ட நேரம் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கின்றது. இதனால் அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கின்றது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து, கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு சியா விதைகளை எவ்வாறு உட்கொள்வது (How To Eat Chia Seeds For Weight Loss) 

1. சியா விதை ஸ்மூத்தி (Chia Seeds Smoothie) 

சியா விதைகளை ஸ்மூத்தியில் (Smoothie) சேர்த்து சாப்பிடலாம். இதை உட்கொள்வதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. மேலும், குளிர்காலத்தில் பொதுவான பிரச்சனைகளான மலச்சிக்கல், அமிலத்தன்மை அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளை இது ஏற்படுத்தாது.

2. வெதுவெதுப்பான நீருடன் உட்கொள்ளவும் (Chia Seeds with Warm Water) 

சியா விதைகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உட்கொண்டால் தொப்பை கொழுப்பை (Belly Fat) எளிதாக குறைக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது இன்னும் பலனளிக்கும். இதற்கு, வெதுவெதுப்பான நீரில் (Warm Water) ஊறவைத்த சியா விதைகளை சேர்க்கவும். அதில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கவும். 

மேலும் படிக்க | Constipation: மலச்சிக்கல் பிரச்சனையா? டோண்ட் வொர்ரி! மலச்சிக்கலுக்கு தீர்வு சொல்லும் பழங்கள்

3. பாலில் சியா விதைகள் (Chia Seeds With Milk) 

குளிர்காலத்தில் காலை உணவாக பாலுடன் சியா விதைகளை கலந்து சாப்பிடலாம். இதற்கு ஓட்ஸ் மற்றும் சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் இந்தக் கலவையை சூடாக்கி அதனுடன் தேன் மற்றும் பழங்களைச் சேர்த்து சாப்பிடலாம். 

4. பழங்கள் மற்றும் சாலட்களில் சாப்பிடுங்கள் (Chia Seeds with Fruits and Salads)

நீங்கள் பழங்கள் (Fruits) மற்றும் சாலட் உடன் சியா விதைகளை உட்கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு பிடித்த பழங்களை வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதில் 3-4 ஸ்பூன் ஊறவைத்த சியா விதைகளை சேர்க்கவும். காய்கறி சாலட்டிலும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

5. சியா விதைகள் மற்றும் ஓட்ஸ் (Chia Seeds with Oats) 

ஓட்ஸ் (Oats) மற்றும் கஞ்சியில் சியா விதைகளை சேர்த்து உட்கொள்ளலாம். இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசியை உணராமல் இருக்கலாம். இதனால் ஆரோக்கியமற்ற தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

குளிர்காலத்தில் இந்த வழிகளில் சியா விதைகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் இதனுடன், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற மறக்காதீர்கள். 

மேலும் படிக்க | மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News