ஜான்சன் & ஜான்சன் பவுடருக்கு இலங்கையில் தடை?

ஜான்சன் அன்ட் ஜான்சன் டால்கர் பவுடர் மாதிரிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறி இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

Updated: Feb 2, 2019, 09:58 AM IST
ஜான்சன் & ஜான்சன் பவுடருக்கு இலங்கையில் தடை?

ஜான்சன் அன்ட் ஜான்சன் டால்கர் பவுடர் மாதிரிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறி இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பு, லோஷன், சோப் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்சன் அன்ட் ஜான்சன் டால்கர் பவுடர் மாதிரிகள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என ஆராய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுதி வருகிறது. 

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டால் என்ற மூலப்பொருள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் பவுடரில் கலக்கப்படவில்லை என நிரூபிக்கும் வரை அந்த பவுடர் இறக்குமதி செய்ய தற்போது இலங்ககை அரசு தடைவிதித்துள்ளது.