முத்தத்தின் நன்மைகள்: முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்கள் மீது பதிக்கும் அல்லது உரசும் செயலாகும். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது.
ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன.
முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன.
மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு.
ALSO READ | ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவியை அந்த இடத்தில் கடித்த கணவர்!!
ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது.
பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து, அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும் என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ALSO READ | பாலத்தில் உச்சியில் லிப் கிஸ் அடிக்கும் போது கீழே விழுந்த காதல் ஜோடி பலி!
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான உறவு முறைமுத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
ALSO READ | குடிபோதையில் ஆண் காவலருக்கு முத்தம் அளித்த வாலிபர் கைது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR