நீரிழிவை ஓட விரட்டும் சிறியாநங்கை... பயன்படுத்துவது எப்படி..!!

ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்ட சிறியாநங்கை பார்ப்பதற்கு வேப்பிலையை போலவே இருக்கும் என்பதோடு, சுவையிலும் வேப்பிலை போலவே கசப்பாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2023, 06:56 AM IST
  • கல்லீரல் நோய்களை விரட்டுவதிலும், குடல் பாதுகாப்பிலும் இந்த சிறியாநங்கை சிறப்பாக செயல்படுகிறது.
  • நிலவேம்புவை போலவே, சிறியாநங்கை செடியையும், விஷ காய்ச்சல்களை விரட்ட உதவும்.
  • சிறியா நங்கை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
நீரிழிவை ஓட விரட்டும் சிறியாநங்கை... பயன்படுத்துவது எப்படி..!! title=

Siriyanangai Herb & Diabetes: பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மூலிகைகள் நம் முன்னோர்களை ஆரோக்கியமானவர்களாக வைத்திருக்கிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மாற்றங்களால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். வாழ்க்கை முறை மாற்றங்களால் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது நம்மில் பொதுவான உடல் நல பிரச்சனையாக ஆகி விட்டது. பெரும்பாலானோர் சர்க்கரையை கட்டுப்படுத்த தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால், வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் (Diabetes Home Remedies). இந்நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக செயல்படும் ஒரு மூலிகையை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.

சிறியா நங்கை மூலிகையில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் போன்ற சாந்தோன்ஸ், சிரட்டானின், சிராட்டால், பால்மிடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும். வெறும் வயிற்றில், ஒரு இலையை மென்று சாப்பிட்டாலே இன்சுலின் சுரப்பு உண்டாகும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். இந்த இலையை காயவைத்து, பவுடராக்கி வைத்து கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.  நீரிழிவு நோய் மட்டுமல்லாது, கல்லீரல் நோய்களை விரட்டுவதிலும், குடல் பாதுகாப்பிலும் (Intestine Health) இந்த சிறியா நங்கை சிறப்பாக செயல்படுகிறது.

சிறியாநங்கையில் அமரோஜென்டின் எனப்படும் உயிர்வேதியியல் கலவை உள்ளது மற்றும் இந்த கலவை நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறியாநங்கை இன்சுலினாக செயல்படுகிறது.

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மருந்து சாப்பிட விரும்பவில்லை என்றால், இயற்கையான வழிகளில் நீரிழிவு நோயைக் குறைக்க சிறியா நங்கை உதவுன். நீங்கள் இயற்கையாகவே சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால், அதற்கு சிறியாநங்கை கஷாயம், சிறியாநங்கை பவுடர் அல்லது சிறியாநங்கை டீ குடிக்கலாம். இது தவிர, சிறியாநங்கை சாறு எடுத்து சாப்பிடுவதற்கு முன் குடிக்கலாம். நீங்கள் அதை ஒரு டானிக்காகவும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | கறிவேப்பிலையில் இருக்கு கடல் அளவு நன்மைகள்: முழு பட்டியல் இதோ

நிலவேம்புவை போலவே, சிறியாநங்கை செடியையும், விஷ காய்ச்சல்களை விரட்ட  உதவும். குறிப்பாக மலேரியா,  ஃப்ளுகாய்ச்சல் முதல் சைனஸ், சளித்தொந்தரவு என நுரையீரல் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தீர்ப்பது வரை, சிறியாநங்கை சிறந்த பலன்களை தருகிறது

சிறியா நங்கை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நீண்ட நாட்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.. அதிலும், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இந்த பொடியை டாக்டரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக இருக்கா... ‘இந்த’ மூலிகை ஒன்றே போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News