குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்காதீர்கள்.. இந்த 5 தீங்குகள் வர வாய்ப்பு!

Carbonated Juices Disadvantages: குளிர்ச்சியான பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் அது அவர்களின் உடல்நலனுக்கு ஏற்படுத்தும் தீங்குகளை தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதுகுறித்து இங்கு காணலாம்.      

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2024, 05:50 PM IST
  • வெயில் காலங்களில் ஜூஸ் குடிப்பது வாடிக்கைதான்.
  • அதில் கார்ப்பனேடட் குளிர்பானங்களை பலரும் குடிக்கிறார்கள்.
  • குழந்தைகளும் இதனை அதிகமாக குடிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்காதீர்கள்.. இந்த 5 தீங்குகள் வர வாய்ப்பு! title=

Carbonated Juices Disadvantages: மதிய வேளைகளில் ஜூஸ் குடிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். வீட்டில் தயார் செய்து பருகும் ஜூஸ் வேறு, வெளியில் கடையில் தயார் செய்யப்படும் ஜூஸ்களை வாங்கி அருந்துவது அல்லது பதப்படுத்தப்பட்ட குடிபானங்களை வாங்கி அருந்துவது வேறு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அதுவும் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் தாகத்தை போக்கவும், உடல் தெம்பாக இருக்கவும் பலரும் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள் 

ஆனால், பழங்களை விட கார்ப்பனேடட் குளிர்பானங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அப்படி குடிப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிக பிடித்தமானது. குழந்தைகளுக்கு பிடிக்கிறது என்பதால் பெற்றோரும், பெரியவர்களும் இதுபோன்ற ஜூஸ்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கின்றனர். 

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்...

ஆனால், இதுபோன்ற குளிர்பானங்கள் குழந்தைகளின் உடலுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கலாம். அதில் உடலுக்கு சக்தி அளிக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை அடிக்கடி குழந்தைகள் குடிப்பது என்பது சரியாகாது என கூறப்படுகிறது. இதுபோன்ற குளிர்ச்சியான பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் அது அவர்களின் உடல்நலனுக்கு ஏற்படுத்தும் தீங்குகளை தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

மேலும் படிக்க | சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!

- முதலில் குழந்தைகளின் பற்களுக்கு இது சேதத்தை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. அதில் இருக்கும் சர்க்கரை மற்றும் அமிலங்களை பற்களின் எனாமலை பலவீனப்படுத்தி பற்களை சூத்தையாக்கும், பற்களில் கடுமையான வலி ஏற்படும். 

- குளிர்பானங்களில் கால்சியம் இருக்கவே இருக்காது, அல்லது மிக மிக குறைவாக இருக்கலாம். கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. எனவே, குளிர்பானங்களை அடிக்கடி குடித்தால் போதுமான கால்சியம் கிடைக்காமல் எலும்புகள் வலுவிலக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

- குளிர்பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். இது குழந்தைகளிடம் உடல் பருமனை ஏற்படுத்தலாம். மேலும், இதில் பெரியளிவில் ஊட்டச்சத்துக்கள் இருக்காது. குழந்தைகளுக்கு தேவையான வைட்டமிண்கள், கனிமங்கள் கிடைக்காது என்பதும் உடல்நலக்குறைவுக்கு இட்டுச்செல்லும். 

- குளிர்பானங்கள் உடலுக்கு சக்தி அளிக்கும் என்றாலும், நீர்ச்சத்தை அளிக்காது. குளிர்பானங்களால் அதிகம் சிறுநீர் வெளியேறும். இதனால், நீர்ச்சத்து குறைவுக்கு இட்டுச்செல்லலாம். 

- குளிர்பானங்கள் குழந்தைகளின் செரிமான அமைப்பில் பிரச்னையை ஏற்படுத்தலாம். இதன்மூலம், செரிமானம் மெதுவாகலாம். வயிற்று வலி, வயிற்றில் உப்புசம், மலச்சிக்கல் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. 

குழந்தைகளை அதிகம் தண்ணீர் குடிக்க வையுங்கள். பழங்கள், தண்ணீர் மட்டும் கலந்த பழங்களின் ஜூஸ்கள், மோர் ஆகியவற்றை நீங்கள் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும், நீர்ச்சத்தையும் அளிக்கும். கார்ப்பனேடட் குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் பழங்களை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ஃபைபர் உங்களுக்கு அப்படியே கிடைக்கும். அதனை ஜூஸ் அடித்துக் குடித்தாலும் அதன் முழு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். ஜூஸ் அடித்துக் குடிக்கும்போது அதில் சர்க்கரையை சேர்க்காமல் குடித்தால் மட்டுமே ஓரளவுக்கு நல்லது. 

மேலும் படிக்க | போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News