சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

Curd And Lemon Benefits: தயிர் மற்றும் எலுமிச்சை உங்கள் முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை நீக்க உதவும். தயிர் மற்றும் எலுமிச்சை முகத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2022, 02:07 PM IST
  • முகத்திற்கு தயிர் மற்றும் எலுமிச்சையின் நன்மைகள்
  • வறண்ட சருமத்திற்கு நன்மை பயக்கும்
  • தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் செய்வது எப்படி
சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு title=

மக்கள் தங்கள் முகத்தை அழகாக மாற்ற பல்வேறு முயர்ச்சிகளை மேற்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், முகத்தை அழகாக மாற்ற தயிர் உங்களுக்கு கட்டாயம் உதவும்.ஆம்., தயிர் மற்றும் எலுமிச்சை உங்கள் முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை நீக்க உதவும். ஏனெனில் தயிரில் உள்ள பண்புகள் சருமத்தை மேம்படுத்தவும், முகப்பரு, கருவளையம் போன்றவற்றை நீக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் அதன் மற்ற பண்புகள் தோல் பிரச்சனைகளை சமாளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் தயிர் மற்றும் எலுமிச்சை எவ்வாறு முகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறயுள்ளோம்.

முகத்திற்கு தயிர் மற்றும் எலுமிச்சையின் நன்மைகள்

தயிர் மற்றும் எலுமிச்சை வறண்ட சருமத்திற்கு நன்மை பயக்கும்
தயிர் மற்றும் எலுமிச்சையின் பயன்பாடு வறண்ட சருமத்தை மேம்படுத்தவும், சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயிர் மற்றும் எலுமிச்சையில் உள்ள பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. மறுபுறம், உங்கள் சருமம் வறண்டிருந்தால், தயிர் மற்றும் எலுமிச்சையை உங்கள் முகத்தில் பயன்படுத்தலாம். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் வறட்சியான சருமத்தைப் போக்கலாம்.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

முகப்பருக்களை போக்க பயனுள்ளதாக இருக்கும்
தயிர் மற்றும் எலுமிச்சையின் பயன்பாடு முகப்பருவை நீக்குவதற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு காரணமாக ஏற்படும் வீக்கத்தை நீக்குவதற்கும் நன்மை பயக்கும்.

தோல் ஈரப்பதத்தை தக்கவைக்கும்
தயிர் மற்றும் எலுமிச்சை பயன்பாடு சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் சருமம் ஈரப்பதத்தைப் பெறுகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருப்பதிலும் இதன் பயன்பாடு நன்மை பயக்கும். அதனால் தினமும் தயிர் மற்றும் எலுமிச்சையை முகத்தில் தடவலாம்.

தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் செய்வது எப்படி-
* தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் செய்ய, முதலில் நீங்கள் 2 ஸ்பூன் தயிர் எடுத்து, அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

* ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சருமத்தில் ஒரு பேக்காக போடவும், பின்பு 20 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News