Neem & Turnmeric: வேப்பிலை - மஞ்சள் கூட்டணி செய்யும் அற்புதங்கள்..!

வேப்பிலை  மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2022, 11:03 AM IST
  • வேம்பு மற்றும் மஞ்சளை சேர்த்து பயன்படுத்தும் முறை
  • அளப்பரிய பலன்கள் கிடைக்கும்
  • இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் சரியான வழி
Neem & Turnmeric: வேப்பிலை - மஞ்சள் கூட்டணி செய்யும் அற்புதங்கள்..! title=

மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் பெரும் நன்மைகள் உள்ளன. வேம்பு மற்றும் மஞ்சள் இரண்டும் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அதாவது, இந்த இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தினால், பல வகையான உடல் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து வைக்கலாம்.

வேம்பு மற்றும் மஞ்சள் 

மஞ்சளில் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், ஆற்றல், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. வேம்புக்கு ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டால், வைரஸ் காய்ச்சலில் இருந்து உடலை பாதுகாக்கலாம். இது தவிர, இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்து, பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

மேலும் படிக்க |  பகீர் தகவல்! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம். வேம்பு மற்றும் மஞ்சள் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

வேம்பு மற்றும் மஞ்சளை குளிர்காலத்திலும் உட்கொள்ளலாம். இதன் மூலம் பல வித குளிர் கால நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இது தவிர வேப்பிலை, மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது இறந்த சரும செல்கள் மற்றும் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது.

வேப்ப இலைகள் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்த நீரை கலந்த தண்ணீர் குளித்தால், அல்லது வேப்பிலை மஞ்சளை  நசுக்கி போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், தோல் தொடர்பான எந்த வகையான ஒவ்வாமையையும் போக்கிவிடலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News