இரவில் நீங்கள் சாப்பிடும் உணவு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இரவில் செரிமானம் நடைபெறாது. இத்தகைய முக்கியமான இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இரவு நேரத்தில் அசைவ உணவு (Non-Veg) எடுத்துக்கொள்ள கூடாது. அசைவ உணவு (Food Habits) செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இரவு நேரத்தில் இந்த செரிமானமானது நடைபெறாது. எனவே இரவு நேரங்களில் கண்டிப்பாக அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
ALSO READ | Health News: வெறும் வயிற்றில் இவற்றிற்கெல்லாம் strict NO!!
இரவு நேரத்தில் வாயு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உண்ண வேண்டாம். இதற்கு காரணம் வாயுவானது இதயத்திற்கு நேரடியாக சென்று இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
இரவு வேவையில் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும்.
முட்டையில் வாயுச்சத்து அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவதை தவிருங்கள். அதிலும் முக்கியமாக வயதானவர்கள் இரவு வேலையில் முட்டையை அறவே ஒதுக்க வேண்டும்.
மைதா மாவினால் ஆன எந்த ஒரு பண்டத்தையும் இரவு நேரத்தில் எடுக்க வேண்டாம். மைதா மாவின் இழுப்பு தன்மை காரணமாக அது குடலில் சென்று சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பரோட்டா போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR