தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்

Onion Peel Benefits: வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 02:55 PM IST
  • வெங்காயத்தோல் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
  • இதற்கு வெங்காயத் தோலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைக்கவும்.
  • அதன் பின் அதை வடிகட்டி அந்த நீரை குடிக்கவும்.
தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள் title=

வெங்காயத் தோலின் நன்மைகள்: வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இது உணவின் சுவையை கூட்டுகிறது. வெங்காயத்தின் விலை உயர்ந்தால் அது நாட்டில் பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும். அந்த அளவுக்கு வெங்காயத்துக்கு நமது சமையலில் அதிக முக்கியத்துவம் உள்ளது. வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்? இவை அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

வெங்காயத் தோலின் நன்மைகள்

1. கண்பார்வை

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கிறது. இதற்கு வெங்காயத்தோல் தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். மேலும் இதனால் சருமத்தின் தன்மையும் மேம்படும்.

2. நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத் தோலில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது. இதனால் சளி-இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.

மேலும் படிக்க | மதுபிரியர்களுக்கான டிப்ஸ்! அதிக போதையால் ஹேங்கோவர் ஆனால் என்ன செய்வது? 

3. கூந்தல் ஆரோக்கியம்

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும். இதனால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

4. இதய நோயாளிகளுக்கு நல்லது

வெங்காயத்தோல் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு வெங்காயத் தோலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். இந்த நீரை குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது. 

5.தொண்டை புண் 

 வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை கடைபிடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க முயற்சியா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News