உடல் எடை விரைவில் அதிகரித்துவிடும் ஆனால் கூடிய எடையை குறிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு மற்றும் மனநிலை போன்ற பல காரணிகள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். பலர் எவ்வளவோ முயன்றும் அவர்களது உடல் எடையில் மாற்றம் இல்லாமலேயே இருக்கும், இதற்கு வேறு சில காரணிகளும் காரணங்களாக அமையும். உங்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உடல் எடையை குறைப்பது உங்களை அழகாக காட்டுவதற்கு மட்டுமின்றி உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பில் நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான தவறுகளை பற்றி பின்வருமாறு காண்போம்.
மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!
1) சரியான தூக்கம் தான் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது, நிம்மதியாக நீண்ட நேரம் தூங்க வேண்டிய நேரத்தில் நீங்கள் குறைந்த அளவிலான தூக்கத்தை பெறுவது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் இரவில் சரியான கால அளவில் தூங்கவில்லையென்றால் உங்கள் ஆற்றல் மட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படும். அடுத்த நாள் காலையில் உங்களுக்கு பசி மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிடும் எண்ணம் மேலோங்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-9 மணிநேரம் நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டியதை இலக்காகக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்னர் மின்னணு சாதனங்கள் எதையும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் மாலை 6 மணியளவில் உங்கள் இரவு உணவை சாப்பிட்டுங்கள். இதுதவிர தினமும் உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.
2) பளபளப்பான சருமத்திற்கும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், நினைவாற்றலை அதிகரிப்பதற்கும், சோர்வை நீக்குவதற்கும், பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் உணவு சாப்பிடும்போது அதிகப்படியான தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்து, செரிமானத்தை பாதிக்கலாம். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் நீங்கள் தண்ணீரை குடித்து வர உணவு உட்கொள்ளப்படும் அளவு குறைவதோடு, உங்கள் செரிமான திறனும் மேம்படும்.
3) காலை உணவைத் தவிர்ப்பது எடை இழப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்த்தால் நீங்கள் அந்த நாளின் பிற்பகுதியில் அதிகமாக சாப்பிடும்படி ஆகிவிடும், இதனால் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதுதவிர உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது மற்றும் தசை இழப்பு ஏற்படலாம். காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவை சாப்பிடும்பொழுது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு கலோரிகள் எரிக்கப்படும்.
4) நாள் முழுவதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இதுபோன்று நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது, இதனால் உடலில் கொழுப்பும் அப்படியே தங்கிவிடுகிறது. நீங்கள் சாப்பிடும் பெரும்பாலான ஸ்நாக்ஸ் வகைகளில் கொழுப்புகள் தான் நிறைந்திருக்கிறது, எதிலும் போதுமான புரதச்சத்து இல்லை. எனவே நீங்கள் நார்சத்து அல்லது புரதசத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள், இது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு முழுமையான ஒரு உணர்வை தரும். இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படும் அதிகப்படியான கலோரிகள் தடுக்கப்பட்டு உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும்.
மேலும் படிக்க | காபி குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ