Turmeric: 'இந்த’ பிரச்சனை இருக்கிறவங்க ‘மஞ்சளுக்கு’ NO சொல்லுங்க...!!

மஞ்சளை உட்கொள்வது நமக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சளால் பாதிக்கப்படுபவர்கள் நம்மில் பலர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2022, 02:39 PM IST
  • கற்கள் பிரச்சனை உள்ள நோயாளிகள் எச்சரிக்கையாக இருங்கள்
  • சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்
  • இரத்தப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கிறது.
Turmeric: 'இந்த’ பிரச்சனை இருக்கிறவங்க ‘மஞ்சளுக்கு’ NO சொல்லுங்க...!! title=

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எந்தெந்த நபர்கள் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை நாமும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள் எச்சரிக்கையாக இருங்கள். கல் உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உண்மையில், அடிக்கடி கல் பிரச்சனையினால் பாதிக்க்ப்படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிரபடுத்தும். எனவே, அவர்கள் மஞ்சளின் உண்பதை முடிந்தவரை குறைத்து, அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள இரத்தத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.

மஞ்சள் அதிகம் உட்கொள்வதால், இரத்தப் போக்கு பிரச்சனை அதிகரிக்கிறது
இரத்தம் உறைதல் செயல்முறையை மஞ்சள் மந்தமாக்குறது. எனவே, திடீரென மூக்கில் அல்லது உடலின் மற்ற பாகங்களில் இருந்து ரத்தம் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வதை மிகவும் குறைக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை நோயாளிகளும் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சள் சாப்பிடக்கூடாது. மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டும்.

ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News