நமக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்து புரதம் அல்லது புரோட்டீன். பொதுவாக வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் அவசியம் என்பார்கள், ஆனால் புரோட்டீன் சத்து என்பது அனைவருக்கும் மிகவும் அவசியம். ஏனெனில் புரோட்டீன் சத்து தான் நமது தசைகளின் கட்டமைப்புக்கும், தசைகளின் வலிமைக்கும் உதவி செய்கிறது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நம் தசைகள் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும். உடலில் புதிய செல்களை உருவாக்க புரதச்சத்து அவசியம். மேலும் நம் உடலில் உள்ள பழைய திசுக்கள் மற்றும் செல்களை சரி செய்யவும் புரதம் உதவுகிறது. நமது ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் அளவு புரதச்சத்து அவசியம். எனவே புரதக் குறைபாடு ஏற்படும் போது நாம் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
தசை பலவீனம்
புரதக் குறைபாடு இருப்பவர்களுக்கு தசை பலவீனம் உண்டாக வாய்ப்புள்ளது. ஏனெனில் உடலில் புரதக் குறைபாடு ஏற்படும் போது அது தசைகளில் உள்ள புரதச்சத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இதனால் காலப்போக்கில் தசைகள் பலவீனம் அடையும்
எடிமா பிரச்சனை
பெருமபாலான் வயதானவர்களுக்கு கை கால் வீக்கம் இருக்கும். இது வலியில்லாத வீக்கம் என்றாலும் அலட்சியமாக விடுவதும் ஆபத்து. கால்களில் அளவுக்கு அதிகமாக நீர் கோர்த்துக்கொள்வதாலேயே கால் வீக்கம் ஏற்படுகிறது. இப்படி நீர் கோர்த்து கால் வீக்கம் ஏற்படுவதற்கு எடிமா என்று பெயர். எடிமா ஏற்பட அல்புமின் குறைபாடு காரணமாகும். அல்புமின் என்பது இரத்தம் அல்லது இரத்த பிளாஸ்மாவில் உள்ள ஒரு புரதமாகும்.
அதிக பசி இருக்கும்
புரதம் குறைபாடு இருப்பவர்களுக்கு அடிக்கடி பசிப்பது போன்ற எண்ணம் ஏற்படும். பசியால் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்ளவீர்கள். எனவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது
சருமம், நகம், முடி பாதிப்புகள்
புரதத்தின் குறைபாட்டினால் முடி உதிர்கிறது. புரதம் குறைபாடு சருமம் மற்றும் நகங்களையும் பாதிக்கிறது. புரதம் இல்லாததால், தோல் வெடிப்புகள் ஏற்படலாம். நகங்களும் பலவீனமடைந்து உடைந்து போகின்றன.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!
நோய் எதிர்ப்பு சக்தி
புரதத்தில் ஏராளமான அமினோ அமிலங்கள் உள்ளன. எனவே புரதச் சத்து குறைபாடு ஏற்படும் போது நம்முடைய நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும். எனவே, புரதக் குறைபாடு உடலில் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில், புரத சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது,
எலும்பு முறிவு
எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிக்க புரதங்கள் அவசியம். புரதச் சத்து குறைபாடு இருக்கும் போது எலும்புகள் பலவீனமாகி எலும்பு முறிவு அடிக்கடி ஏற்படும்.
கல்லீரல் பிரச்சினை
புரத சத்து குறைபாடு, கல்லீரல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதனால், கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்கிறது. இது கல்லீரல் வீக்கம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கல்லீரல் பிரச்சனை உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் ஏற்படுகிறது.
புரத சத்து நிறைந்த சில உணவுகள்
தினமும் உணவில் ஓரளவு புரதம் நிறைந்த உணவை சேர்க்கவும். இதினால் வயிறு நிறைந்த மனநிறைவு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் பெரிதும் உதவும். புரதக் குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
முட்டை
முட்டையில் கால்சியம் மட்டுமின்றி புரதமும் நிறைந்துள்ளது. எனவே, காலை உணவாக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் நாளை சிறப்பாக தொடக்கலாம். முட்டையில் பலவிதமான சத்துக்களும் நிறைந்துள்ளன. வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
பன்னீர்
பொதுவாக, பால் பொருட்கள் புரதச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட பெரிதும் உதவும். புரதத்தைத் தவிர, இதில் கால்ஷியமும் நிறைந்துள்ளது மற்றும் உங்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்க முடியும். இது ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் பால் அல்லாத புரதங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், கிட்னி பீன்ஸ் (ராஜ்மா), கொண்டைக்கடலை போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ