நரை முடி தொல்லையில் இருந்து விடுப்பட இந்த இயற்க்கை வைத்தியம் போதும்

Blacken White Hair Naturally: நரை முடியை கருப்பாக்க பல வீட்டு வைத்தியங்கள் இருக்கலாம். ஆனால் கூந்தலை கருமையாக்க பூசப்படும் மருதாணியின் நிறம் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இந்த குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2024, 06:52 PM IST
  • மருதாணியில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்.
  • நீண்ட நேரம் முடி கருப்பாக இருக்க மருதாணியில் இவற்றை சேர்க்கவும்.
நரை முடி தொல்லையில் இருந்து விடுப்பட இந்த இயற்க்கை வைத்தியம் போதும் title=

How To Blacken White Hair Naturally: சில வயதில் சிலருக்கு முடி நரைக்கத் தொடங்கிவிடுகிறது.  ஆனால் இளமையில் முடி நரைப்பது சற்று கவலையான விஷயமாகும். தலைமுடி நீளமாகவும், பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பமாகும். இன்றைய வாழ்க்கை முறையில் முடி நரைப்பது சகஜமாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், நரை முடியை கருப்பாக்குவதற்கு வீட்டு வைத்தியம் உட்பட பலவற்றை முயற்சி செய்யலாம். வெள்ளை முடியை கருப்பாக்குவது எப்படி, முடியை கருமையாக்க தீர்வு, நரையை தடுக்கும் தீர்வு, வெள்ளை முடியை கருப்பாக்க ஆயுர்வேத மருந்து போன்ற பல கேள்விகள் பலருக்கும் இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் தலைமுடியின் வெண்மையை மறைக்க மருதாணி பயன்படுத்துகின்றனர். தலைமுடிக்கு வண்ணம் பூசுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எனவே நீண்ட நாட்கள் வெள்ளை முடியை கருப்பாகவே இருக்க மருதாணியில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க | வேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது

நீண்ட நேரம் முடி கருப்பாக இருக்க மருதாணியில் இவற்றை சேர்க்கவும் | What To Add To Henna To Keep Hair Black For A Long Time:

மருதாணியை சும்மா சும்மா பயன்படுத்த உங்களுக்கு சோம்பேறித்தனமாக இருந்தால், காபி ஒரு சிறந்த வழியாகும். இது மருதாணியுடன் கலந்து பயன்படுத்தும்போது முடிக்கு ஆழமான மற்றும் நீடித்த நிறத்தை அளிக்கும். காபியில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடிக்கு வலிமையையும் பொலிவையும் அளிக்கும்.

இதற்கு உங்களுக்கு தேவையானது 100 கிராம் மருதாணி தூள், 2-3 தேக்கரண்டி காபி தூள் மற்றும் தண்ணீர். முதலில் 2-3 டேபிள் ஸ்பூன் காபி பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். காபி சாறு சரியாக வரும்படி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் இதை ஆற விடவும். ஒரு பாத்திரத்தில் 100 கிராம் மருதாணி பொடியை போடவும். இப்போது அதில் ஆறிய காபி சாற்றை மெதுவாக சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், நீங்கள் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை 2-3 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைக்கவும், இதனால் மருதாணி மற்றும் காபி நன்கு கலந்து நிறம் வெளிப்படும். தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை வேர்கள் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவவும். தலைமுடியில் 2-3 மணி நேரம் விடவும். 2-3 மணி நேரம் கழித்து சாதாரண நீரில் முடியைக் கழுவவும். உடனடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். மறுநாள் ஷாம்பு பயன்பத்தவும்.

இந்த கலவையின் நன்மைகள் என்னென்ன?
காபி மற்றும் மருதாணி கலவையானது நீண்ட நாட்கள் நீடிக்கும். அதேபோல் கூந்தலுக்கு இயற்கையான ஆழமான கருப்பு நிறத்தை அளிக்கும். இந்த கலவை முற்றிலும் இயற்கையானது மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் இதில் கிடையாது, இதன் காரணமாக முடி சேதமடையாமல் இருக்கும். காபி மற்றும் மருதாணி இரண்டும் கூந்தலுக்கு வலிமையையும், பொலிவையும் அளித்து, கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Yellow Teeth: அசிங்கமா மஞ்சள் பற்கள் இருக்கா? அப்போ இந்த வெள்ளை பொடியை பயன்படுத்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News