கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!

Eye Twitching : பலருக்கு கண் துடிக்கும் பிரச்சனை இருக்கும். இதற்கு உடல் ரீதியாக இருக்கும் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.   

Written by - Yuvashree | Last Updated : May 30, 2024, 05:20 PM IST
  • கண் துடிப்பதற்கான காரணங்கள்
  • இதனால் வரும் பிரச்சனைகள் என்ன?
  • இதை எப்படி குணப்படுத்தலாம்?
கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்! title=

Eye Twitching : “எனக்கு காலைல இருந்து வலது கண் துடிச்சிக்கிட்டே இருக்கு..” என்று யாரேனும் கூறினால், “உனக்கு அப்போ நல்லது நடக்கப்போகுதுன்னு அர்த்தம்..” என்று பலர் கூற கேட்டிருப்போம். கண்கள் துடிப்பதற்கு மட்டுமல்ல, இப்படி உடல் நலனில் இருக்கும் ஏதேனும் சிறிய கோளாறு, இது போன்ற அறிகுறிகளை காட்டும் பாேது அதற்கு ஒரு தெய்வீக காரணத்தையோ அல்லது மூட நம்பிக்கையையோ கூறி, நம்மை நம்ப வைத்திருக்கின்றனர். இதனாலேயே கண் துடிப்பது நல்லதா கெட்டதா என்று தெரியாமல் பலர் வாழ்கின்றனர். 

கண் துடிப்பது :

கண் துடிப்பதை ஆங்கிலத்தில் Eye Twitching என்று கூறுவர். இது, உலகில் பெரும்பாலானோருக்கு வரக்கூடிய ஒன்றாகும். சோர்வு, கண் வலி போன்ற பல காரணிகள், கண் துடிப்பிற்கு காரணமாக அமையலாம். சில சமயங்களில் தூக்கம் இல்லை என்றால் கூட, கண் துடிக்கலாம். கண் துடிப்பதிலேயே பல வகைகள் இருக்கின்றன. கண்களினாலும் கண் துடிப்பு ஏற்படலாம், ஒரு சில சில சந்தர்ப்பங்களில் நரம்பு அல்லது முகத்தசைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவும் கண் துடிக்கலாம். 

கண் துடிப்பதற்கான காரணங்கள்:

Fasciculations
இவை பல்வேறு காரணங்களினால் உருவாகலாம். அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாலோ, உடலுக்கு அதிக உழைப்பு கொடுத்தாலோ இது ஏற்படும். 

மயோக்கிமியா:

மயோக்கிமியா என்பது பலர் மத்தியில் அறியப்படும் குறைபாடாகும். மேற்கூரியதை போல தூக்கமின்மை, சோர்வு, அதிகமாக கஃபைன் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் இந்த குறைபாடு ஏற்படலாம். 
கண் இமை பிடிப்புகள்:

நம் உடல் தசைகளில் எப்படி எப்போதாவது பிடிப்பு அல்லது அழுத்தம் ஏற்படுகிறதோ, அதே போல கண் இமைகளீலும் ஏற்படலாம். இதில், இரு வகை இருக்கின்றன. முதல் வகை கண்கள் காய்ந்து போவதனாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஏற்படுகிறது. இது நரம்பு பிரச்சனை தொடர்பானதாகவும் இருக்கலாம். 

கண் இமைப்பு பிடிப்புகளின் இரண்டாவது காரணம் கை-கால் வலிப்பு நோய் காரணமாக (அரிய வகை) இருக்கலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில் இது பார்கின்சன்ஸ் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது 

கண் துடிப்பு என்பது மிகவும் பொதுவான ஒன்று என்றும், இது மிகவும் அரிதாகத்தான் பெரிய நோய் பாதிப்பாக மாறுவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | கண் பார்வை மங்காமல் இருக்க..‘இந்த’ சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்காேங்க..!

கண் துடிப்பு எப்போதெல்லாம் ஏற்படலாம்?
>மன அழுத்தம் அல்லது மன பதற்றம் ஏற்படும் சமயங்களில் ஏற்படலாம். 
>சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் ஏற்படலாம்.
>அதிக கஃபைன் மற்றும் மது அருந்தினால் ஏற்படலாம்.
>கண்களுக்கு அதிக வேலை கொடுத்தால் ஏற்படலாம்.
>கண்கள் காய்ந்து போகையில் ஏற்படலாம்.
>அதிகம் வெளிச்சம் நிறைந்த இடத்தில் இருந்தால் ஏற்படலாம்.
>உடலுக்கு அதிக உழைப்பு கொடுக்கும் சமயங்களில் ஏற்படலாம்.
>எங்காவது வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும் சமயத்தில் ஏற்படலாம். 

இதை தடுப்பது எப்படி?

>கண்டிப்பாக நிறைவான தூக்கம். அந்த உறக்கம் 7-8 மணி நேரம் வரை இருக்க வேண்டும். 
>சரியான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக கண்களுக்கு நன்மை பயக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 
>மன அழுத்தத்தை குறைக்க வழிகளை தேட வேண்டும். 
>கஃபைன் உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். 
>மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News