Shocking: இரவு நேர செயற்கை ஒளியால் Thyroid Cancer-ன் ஆபத்து அதிகரிக்கலாம்

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் நடுக்கம் கொள்கிறார்கள். புற்றுநோயின் பல கட்டங்கள் உள்ளன என்பதும் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 14, 2021, 05:14 PM IST
  • இரவு நேரத்தில் செயற்கை ஒளியால் தைய்ராய்ட் புற்றுநோய் அதிகரிக்கக்கூடும்.
  • சமீப காலங்களில் தைய்ராய்ட் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது.
  • மாறி வரும் வாழ்க்கை முறையை இதற்கான முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
Shocking: இரவு நேர செயற்கை ஒளியால் Thyroid Cancer-ன் ஆபத்து அதிகரிக்கலாம் title=

மனித குலத்தை பாடாய் படுத்தும் பல நோய்கள் உள்ளன. அவற்றில் புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது. இந்த நவீன காலத்திலும், இதற்கான உறுதியான தீர்வு என எதுவும் இல்லை. சிலர் முற்றிலும் குணமாகிவிடுகிறார்கள். ஆனால், சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் இருப்பத்தில்லை. இதற்கான சிகிச்சையில் அதிகமான பணமும் செலவாகிறது. சாதாரண வருமானம் உள்ளவர்களால் இதை சமாளிக்க முடிவதில்லை.

புற்றுநோய் (Cancer) என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் நடுக்கம் கொள்கிறார்கள். புற்றுநோயின் பல கட்டங்கள் உள்ளன என்பதும் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எலும்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் போன்றவை சில பிரபலமான புற்றுநோய் வகைகளாகும்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு ஆன்லைன் ஆய்வில், இரவு நேரத்தில் செயற்கை ஒளிக்கு வெளிப்படுபவர்களுக்கு தைராய்டு புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில மார்பக புற்றுநோய்கள் தைராய்டு புற்றுநோயுடன் பொதுவான, ஹார்மோன் (Hormones) சார்ந்த பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், இரவு நேர செயற்கை வெளிச்சம் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிப்பதற்காக மட்டும் தனது கண்டுபிடிப்புகள் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ALSO READ: Health News: திராட்சை உண்பதால் புற்றுநோயைத் தவிர்க்கலாம் தெரியுமா?

 

ஆய்வாளர் கியான் சியாவோ ஒரு பத்திரிகையில், இரவு நேர ஒளி வெளிப்பாட்டின் பங்கைப் பற்றியும், சர்க்காடியன் குறுக்கீட்டைப் பற்றியும் பார்க்கும்போதும், தங்கள் ஆய்வு, ஆய்வாளர்களுக்கு, இரவு நேர ஒளிக்கும் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கும் இடையிலான உறவை ஆராய உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.

அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பல தசாப்தங்களாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றும் 1970-க்குப் பிறகு தைராய்டு புற்றுநோய் பற்றி மிக அதிகமாகத் தெரிய வந்துள்ளது என்றும் இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் தைராய்டு புற்றுநோய்க்கான அனைத்து காரணங்களையும் அரிய பல வித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

டாக்டர் கேடி ஹார்-எல், நியூயார்க் நகரத்தின் லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் துறைத் தலைவராக உள்ளார். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், இரவு பகல் என இந்த கால நேரங்களுக்கு முன்பு இருந்த வரையறுக்கப்பட்ட வேறுபாடுகள் இல்லாமல் போனதும் தைராய்ட் புற்றுநோய் அதிகரித்தமைக்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும் என்று அவர் கருதுவதாகக் கூறினார். ஆனால் இவை மட்டும் இந்த நோய் அதிகரித்ததற்கான காரணமாக் இருக்காது என அவர் எச்சரிக்கிறார்.  

ஆய்வாளர்களின் கருத்துபடி, இரவு நேர செயற்கை ஒளி, இயற்கை மெலடோனை ஒடுக்குகிறது. இது ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டின் ஒரு மாடுலேட்டராகும். மிகக் குறைந்த மெலடோனின் செயல்பாடு, கட்டிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இரவு நேர செயற்கை ஒளி உடலின் சர்க்காடியன் சமன்பாட்டையும் சீர்குலைக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இது புற்றுநோய் ஆபத்து காரணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: மாறிவரும் காலநிலை.. நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News