இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் எடை அதிகரிப்பால் சிரமப்படுகின்றனர், எனவே அவர்கள் எடை குறைப்பதற்காக பல விஷயங்களை முயரச்சிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடை தானாகவே வேகமாக குறைய ஆரம்பித்தால், அது மகிழ்ச்சியான்அ செய்தி அல்ல, மாறாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆர்தமாகும். ஆம், எந்த காரணமும் இல்லாமல் உடல் எடையை குறைவது ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதனால்தான் உடல் எடையை குறைக்கும் போது உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே எடை குறைவதற்கான காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்த காரணங்களால் திடீரென உடல் எடை குறையும்
நீரிழிவு: சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தாலும் உடல் எடை குறைத் தொடங்கும். உடலில் சர்க்கரை அளவு தேவைக்கு அதிகமாக அதிகரிக்க ஆரம்பித்தால் அது எடையை பாதிக்கும். இதில், சிலரின் எடை கூடி, குண்டாக மாற வைக்கும். அதுவே சிலரின் உடல் எடைத் குறைய தொடங்கும்.
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
புற்றுநோய்: இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயல்ல, அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிய வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகளில் ஒன்று எடை இழப்பு. ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அவரது எடை மிக வேகமாகக் குறையத் தொடங்கும். ஏனெனில் உடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது, உடலின் ஊட்டச்சத்து கூறுகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தொடங்குகின்றன, மேலும் உங்கள் எடை குறையத் தொடங்குகிறது.
தைராய்டு ஹார்மோன்: உங்கள் உடலின் பல செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோனை உருவாக்கும் போது தைராய்டு சுரப்பியின் வளர்சிதை மாற்றமானது, எடை இழப்பு போன்ற அறிகுறிகளைக் காட்டலாம். உங்களுக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருக்கும்போது, நல்ல பசி இருந்தாலும்கூட கலோரிகளை விரைவாக எரிக்கலாம். இந்த நிலையில் மற்ற அறிகுறிகளாக சோர்வு, தசை பலவீனம், தூங்குவதில் சிரமம், பெண்களுக்கு பீரியட்ஸ் மாற்றம், வயிற்றுப்போக்கு, விரைவான இதயத்துடிப்பு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை இருக்கலாம்.
ஆகவே உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பித்தால், தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டால், உடலில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ