Sperm Count: விந்தணுக்கள் மிக வேகமாக குறைகிறது என்பதற்கான ‘சில’ அறிகுறிகள்!

விந்தணு எண்ணிக்கை வேகமாக குறையும் போது ஒரு ஆண் உடலில் தோன்றும் சில மாற்றங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 6, 2023, 02:29 PM IST
  • விந்துணுக்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு இருப்பது இயல்பானது?
  • விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணங்கள்.
  • குறைந்த விந்தணு எண்ணிக்கை இருப்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள்.
Sperm Count: விந்தணுக்கள் மிக வேகமாக குறைகிறது என்பதற்கான ‘சில’ அறிகுறிகள்! title=

மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது.  ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும். இந்நிலையில், விந்தணுக்களின் எண்ணிக்கையில் திடீரெனக் குறைவதினால், உடலில் தோன்றும் சில அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

விந்தணு எண்ணிக்கை என்றால் என்ன: விந்துணுக்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு இருப்பது இயல்பானது?

முதலில், விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு மில்லிலிட்டர் விந்துவில் இருக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை. ஒரு சாதாரண விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லிலிட்டருக்கு 15 மில்லியன் விந்து அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count), ஒலிகோஸ்பெர்மியா (Oligospermia) என்றும் அழைக்கப்படுகிறது, விந்தணுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லிலிட்டருக்கு 15 மில்லியன் விந்தணுக்களுக்குக் குறைவாக இருந்தால்.

வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் ஏற்படுத்தும் தாக்கம்

குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கு முதன்மையான காரணம் என்பது ஒருவர் பின்பற்றும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் ஆகும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் ஆண் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது இறுதியில் விந்தணு எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தும். குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கு பங்களிக்கும் இதுபோன்ற 6 வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பற்றி முதலில் அறிந்து கொள்ளலாம்:

விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணங்கள்: 

1. மரபணு காரணிகள்

2. ஹார்மோன் சமநிலையின்மை

3. வெரிகோசெல், டெஸ்டிகுலர் புற்று நோய் மற்றும் தொற்று போன்ற உடல்நலப் பிரச்சினைகள்

4. வெப்பம் மற்றும் இரசாயன வெளிப்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் கூறுகள்

5. புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் மற்றும் 

6. போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட வாழ்க்கை முறை தேர்வுகள்

குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒரு குழந்தையை கருத்தரிக்க கடினமாக அல்லது சாத்தியமற்றதாக ஆக்குகிறது. இருப்பினும், விந்தணு எண்ணிக்கை மற்றும் கருவுறுதலை மேம்படுத்த உதவும் பல சிகிச்சைகள் உள்ளன.

மேலும் படிக்க | திருமணமான ஆண்கள் பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் அந்த விஷயத்தில் பிரச்னை வராது!

குறைந்த விந்தணு எண்ணிக்கை  இருப்பதற்கான அறிகுறிகள்

உங்களிடம் குறைந்த விந்தணு எண்ணிக்கை இருப்பதைக் குறிக்கும் பல அறிகுறிகளை (Low Sperm Count Symptoms) அறிந்து கொள்ளலாம் 

1. தாம்பத்திய உறவில் தொடர்ந்து ஈடுபட்ட  ஒரு வருடத்திற்குப் பிறகு குழந்தையை கருத்தரிப்பதில் சிக்கல்

2. வெளியேறும் விந்து அளவு அசாதாரண அளவில் குறைதல், நீர்த்த நிலையில் விந்து போன்ற விந்துவின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்

3. விரைகளில் வலி அல்லது வீக்கம்

4. குறைவான பாலியல் உணர்ச்சி

5. விறைப்புத்தன்மை பிரச்சனை

6. முகம் அல்லது உடலில் முடி குறைதல்

7. மார்பக அளவு அதிகரித்தல்

8. அதிக எடை அல்லது பருமனாக இருப்பது

9. விரைகளில் காயம் அல்லது நோய்த்தொற்று ஏற்பட்ட நிலை

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால், விந்தணு மிக வேகமாக குறைகிறது என்பதை உணர்த்துகிறது எண்ணிக்கையை பரிசோதிக்க மருத்துவரை அணுகுவது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அஞ்சறைப் பெட்டி அதிசயம்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News