Healthy Milk: பாலுடன் கூட்டணி வைத்தால் ஆரோக்கிய வெற்றி பெறுவது தேனா? பழமா?

பாதாம் மற்றும் பால் இரண்டும் கூட்டணி சேர்ந்தால், இந்த கூட்டணியை வீழ்த்த எந்த நோயாலும் முடியாது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2022, 09:39 AM IST
  • பாலுடன் சேர்ந்தால் அதிக ஆரோக்கியம் தரும் பொருட்கள்
  • ஆரோக்கிய கூட்டணியில் பாலும் பழமும் முதலிடம் பெறுபவை
  • இரண்டாவது மிகச்சிறந்த ஆரோக்கிய கூட்டணி பாலும் பாதாமும்
Healthy Milk: பாலுடன் கூட்டணி வைத்தால் ஆரோக்கிய வெற்றி பெறுவது தேனா? பழமா? title=

புதுடெல்லி: பாலும் பழமும் என்பது தமிழர்களின் மரபில் கலந்து விட்ட ஆரோக்கிய உணவு பழக்கம். திருமணமான உடனே, மணமக்களுக்கு முதலில் கொடுப்பது பாலும் பழமும் என்பதன் அடிப்படையும் இதுதான்..
 
வாழைப்பழம், பால் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் ஆரோக்கியமானது (Benefit of Eating Banan and Milk)என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாலுடன் வேறு எந்தப் பொருட்களை சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும் என்பதை தெரிந்துக் கொண்டால், என்றென்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பொதுவாகவே, பால் ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. உலகில் பிறந்த உடனே கொடுக்கும் முதல் உணவு பால் என்றால், ஒருவர் இறந்த பின்பும் பால் ஊற்றும் சம்பிரதாயமும் இருக்கிறது.

பாதாமை பாலுடன் சேர்த்து குடிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாதாமுடன் இணைந்த பாலின் சக்தி உடலை வலுவூட்டுகிறது. பல்வேறு சத்துக்களும் கிடைக்கும். 

ALSO READ | நோய்களுக்கு வேம்பாகும் வெந்தயம்!

பாதாம் மற்றும் பாலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின் டி, பாஸ்பரஸ், சோடியம் ஆகியவை பாலில் காணப்படுகின்றன. 
பாதாமில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஈ, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

பாதாம் மற்றும் பால் (Benefit of Eating badam and milk) இரண்டும் கூட்டணி சேர்ந்தால், இந்த கூட்டணியை வீழ்த்த எந்த நோயாலும் முடியாது என்றே சொல்லலாம். பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆரோக்கிய கூட்டணி இது. 

பாலுடன் இணைந்தால் அதிக ஆரோக்கியத்தை பரிசாக தருகிறது பாதாம். பாதாம் மற்றும் பால் இரண்டும் கூட்டணி சேர்ந்தால், இந்த கூட்டணியை வீழ்த்த எந்த நோயாலும் முடியாது 

ALSO READ | பழத்தில் மட்டுமல்ல வாழைப்பழத் தோலிலும் மறைந்திருக்கும் ஆரோக்கியம்!

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மஞ்சள் பால் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது வீட்டு வைத்தியமாக தொன்றுதொட்டு தொடர்கிறது.
மஞ்சள் பால் சத்தானதாக இருப்பதுடன், கெட்ட பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது. 

சிறுநீர், நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை அகற்றவும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உதவியாக இருக்கும்.

பாலில் தேன் கலந்து குடிப்பது

பாலில் தேன் (Benefit of mixing honey in milk) சேர்ப்பது அதன் நன்மைகளை இரட்டிப்பாக்குகிறது. பாலைப் போலவே தேனும் நற்பண்புகளின் சுரங்கமாக கருதப்படுகிறது. வைட்டமின் பி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் தேனில் உள்ளன.

இந்த சத்துக்கள் அனைத்தும் உங்கள் உடலுக்கு இன்றியமையாதவை. இந்த ஊட்டச்சத்துக்களுடன் பாலின் நற்குணங்களும் இணைந்தால், ஆரோக்கியமும், இளமையும் என்றென்றென்றும் நீடிக்கும்.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News