அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்

Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2024, 05:56 PM IST
  • யூரிக் அமிலம் படிக வடிவில் மூட்டுகளில் படியத் தொடங்குகிறது.
  • அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் பாதங்களிலும் தோன்றத் தொடங்குகின்றன.
  • உள்ளங்காலில் வலி ஏற்படுவது.
அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம் title=

High Uric Acid Symptoms: பியூரின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால் உடலில் யூரிக் அமிலம் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதனால் இந்த யூரிக் அமிலம் படிக வடிவில் மூட்டுகளில் (Joint Pain) படியத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், மூட்டு வலி ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் படிபடியாகத் ஏற்படும். யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிக்கும் போது, ​​உடலில் பல அறிகுறிகள் தோன்றும். அத்தகைய சூழிநிலையில், அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் பாதங்களிலும் தோன்றத் தொடங்குகின்றன. இந்நிலையில் உங்களின் பாதங்களில் யூரிக் அமிலம் அதிகமாக (High Uric Acid Signs) இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

இவையே பாதங்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும்: 

கால்களில் வீக்கம் ஏற்படலாம்: இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கினால், கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. பாதங்களில் அல்லது அதைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுகவும். சில நேரங்களில் வீக்கம் வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!

கால்களில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவது: பாதங்கள் மற்றும் முழங்கால்களைச் சுற்றி சிவப்பு தடிப்புகள் ஏற்பட்டால் இது அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தின் பிரச்சனையாகும். அதிக யூரிக் அமிலத்தில், கட்டைவிரலின் மேல் பகுதி சிவப்பு நிறத்தில் ஏற்படத் தொடங்கலாம். இந்த அறிகுறி தென்பட்டால், இரத்தப் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

கால்களின் தோல் அசிங்கமாக தெரியலாம்: அதிக யூரிக் அமிலம் காரணமாக, தோல் மிகவும் வறண்டு கருப்பு நிறமாக மாறலாம். அத்தகைய சூழ்நிலையில், பாதங்கள் அசிங்கமாகவும் அழுக்காகவும் தோன்ற ஆரம்பிக்கும். அத்தகைய அறிகுறிகளை நீங்கள் அலட்சியப் படுத்த வேண்டாம்.

கட்டைவிரல் வலி ஏற்படுவது: கால்விரல்களுக்கு அருகில் ஏதேனும் வீக்கம் காணலாம். இதனுடன், கடுமையான வலி ஏற்படலாம். கடுமையான வலி உங்கள் உடலில் அதிக யூரிக் அமிலத்தின் சிக்கலை மேலும் உயர்த்தலாம்.

உள்ளங்காலில் வலி ஏற்படுவது: சில நேரங்களில் அதிக யூரிக் அமிலம் காரணமாக, உள்ளங்காலில் கடுமையான வலி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் காணப்பட்டால், இதை அலட்சியம் கொள்ள வேண்டாம். இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், மருத்துவ நிபுணரை அணுகவும்.

மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News