தைராய்டு பிரச்சனை ஏற்பட்டால், அந்த நபர் தைராய்டு மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சில தவறுகள், தைராய்டு மருந்துகளின் செயல்திறனை குறைக்கலாம்.அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
தைராய்டு பிரச்சனை ஹார்மோன்களுடன் தொடர்புடையது. இந்த பிரச்சனை உள்ள நபரின் தைராய்டு சுரப்பி சமநிலையற்ற வகையில் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த பிரச்சனையால், பாதிக்கப்பட்டவரின் உடல் எடை கூடுகிறது அல்லது குறைகிறது. இது தவிர முடி உதிர்வு பிரச்சனை, உடலில் சோம்பல் பிரச்சனை போன்றவற்றை காணலாம்.
தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த, மருந்துகளை தவறாமல் உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அத்துடன் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், தைராய்டு பிரச்னை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
தைராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது செய்யும் சில தவறுகள் சிக்கல்களை ஏற்படுத்தும்.
1. தைராய்டு மருந்தை உட்கொள்ளும் போது, இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது. உணவிற்கு பிறகு எடுத்துக் கொண்டால், உடலில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
2. தேநீர் அல்லது காபியுடன் தைராய்டு மருந்தை ஒருபோதும் உட்கொள்ளக் கூய்டாது. அப்படி செய்தால் பகக் விளை ஏற்படும்
3. தைராய்டு மருந்து சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து, தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். மருந்துக்குப் பிறகு உடனடியாக காலை உணவை உட்கொள்வது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
4. தைராய்டு மருந்தை ஒரு நாள் கூட தவறவிடக் கூடாது. அதை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதை தவறவிடுவது அதன் செயல்திறனை பாதிக்கலாம்.
5. தைராய்டு மருந்தை எப்போதும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் ஒவ்வொருவருடைய நிலையும் வேறுபட்டதாக இருக்கும். மருத்துவர் சூழ்நிலைக்கு ஏற்ப மருந்தின் வீரியம் எவ்வளவு இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறார்.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR