நீங்க சாப்பிடுவதை கண்காணிக்க டூத்-மௌண்டேன் சென்சார்!

நாம் சாப்பிடும் உணவு மற்றும் சுகாதாரத்தை கண்காணிக்கும் வகையில் புதிய சென்சார் கண்டுபிடித்துள்ளனர்...! 

Updated: Apr 9, 2018, 05:00 PM IST
நீங்க சாப்பிடுவதை கண்காணிக்க டூத்-மௌண்டேன் சென்சார்!

நமது வாயில் உள்ள பற்களில் பொறுத்தி நமது உணவுப் பழக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் மிகச் சிறிய சென்சார் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

அமெரிக்காவின் டஃப்ட்ஸ் (Tufts University) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிக நுண்ணிய சென்சார் ஒன்றை உணவு பழக்கத்தை கண்காணிப்பதற்காகவே உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார் வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சென்சார் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ், உப்பு மற்றும் ஆல்கஹால் அளவை மிக துல்லியமாக கணக்கிடுமாம். இதை வாய் பகுதியில் பல்லில் ஒட்டிவைத்தால் உட்கொள்ளப்படும் உணவுகளைப் பற்றிய அனைத்து தெரிவித்துள்ளனர்.  

மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சென்சாரில் மேல் அடுக்கு பயோரெஸ்பான்சிவ் (bioresponsive) அடுக்கு ஆகும். இது உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள், வேதிப் பொருட்கள் போன்றவற்றை அறிந்து தகவல்களை வழங்குகிறது. மற்ற இரண்டு அடுக்குகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து ஆண்டனா (Antenna) போன்று செயல்படுகிறது. 

இதன் மூலம் உருவாக்கப்படும் கதிர் வீச்சு அதிர்வெண் அலைகள் மூலம் தரவுகள் பெறப்படுகின்றன. இந்த அடுக்குகளில் படும் உணவின் தன்மைக்கு ஏற்ப அவை நிறம் மாறுகின்ற வகையில் உருவாகியுள்ளனர். முதன் முறையாக் உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கண்காணிப்பதற்கு இந்த ஸ்மார்ட் சென்சார் உருவாக்கப்பட்டுள்ளது.