சூரிய ஒளி என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது நமது உடல் வைட்டமின் D ஊட்டச்சத்தை உற்பத்தி செய்கிறது. வைட்டமின் டி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கிறது. உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட, வைட்டமின் டி மிகவும் அவசியம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது வைட்டமின் டி. வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக சைவ உணவு உண்பவர்களிடையே இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வைட்டமின் டி குறைபாடு மூட்டு வலிகளை அதிகப்படுத்துவதோடு, உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும்.
இன்றைய காலகட்டத்தில், போதுமான வைட்டமின் டி உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும், உடலில் வைட்டமின் டியின் உகந்த அளவை பராமரிக்காததன் விளைவுகளையும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது முன்னெப்போதையும் விட மிகவும் பொதுவானதாகிவிட்டது. இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பலருக்குத் தெரியாது. அளவிற்கு அதிகமாக எதையும் எடுத்துக் கொள்வது ஆபத்து. எனவே, வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிகமாக உட்கொள்ளும் போது, நீங்கள் சில ஆபத்தான பக்க விளைவுகளை சந்திக்கலாம் (Health Tips) . இவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதை காட்டும் சில அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகள்
வைட்டமின் டி நச்சுத்தன்மை (Vitamin D toxicity) அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி (Hypervitaminosis D ) என்பது உங்கள் உடலில் வைட்டமின் டி அளவுகள் தேவைக்கு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. வைட்டமின் டி நச்சுத்தன்மையின் சில அறிகுறிகளில், உயர் இரத்த அழுத்தம், மன ஆரோக்கியம் பாதிப்பு, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் டி நச்சுத்தன்மையின் முக்கிய விளைவுகளில் ஒன்று, உங்கள் இரத்தத்தில் கால்சியம் அதிகமாகக் குவிவது, இது ஹைபர்கால்சீமியா (hypercalcemia) என்றும் அழைக்கப்படுகிறது. ஹைபர்கால்சீமியா குமட்டல், வாந்தி, பலவீனம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.
சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வைட்டமின் டி நச்சுத்தன்மை எலும்பு வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கும். அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.
மேலும் படிக்க | கிரீன் டீ தெரியும்... கிரீன் காபி தெரியுமா... வியக்க வைக்கும் ஆரோக்கிய பலன்கள்!
உடலில் வைட்டமின் டி அதிகமாக இருந்தால், மூளையின் செயல்பாடு பாதிக்கலாம். மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மன உளைச்சல் இருந்தாலோ, தேவையில்லாத கலக்கம் ஏற்பட்டாலோ, அல்லது சிறிய விஷயம் கூட உங்களை மனச்சோர்வு ஏற்பட்டு குழப்பம் உண்டானாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து, விட்டமின் டி அதிகம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் டி உட்கொள்ள வேண்டும்?
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் படி, 1-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 15 mcg அல்லது 600 IU வைட்டமின் D உட்கொள்ள வேண்டும். வயது, சூரிய ஒளி உடலில் படுதல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப உங்களுக்கான வைட்டமின் தினசரி தேவையைப் புரிந்து கொள்ள ஒரு மருத்துவ நிபுணரை அணுகவும். மேலும், ஒரு நிபுணரின் ஆலோசனை இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள் எடுக்க கூடாது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ