தேவையான பொருட்கள் :
ரொட்டி 10 துண்டுகள்
மைதா அல்லது ரவை கால் கப்
பச்சரிசி மாவு 1 தேக்கரண்டி
தயிர் 1 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 5
இஞ்சி 2 துண்டுகள்
கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை :
ரொட்டியின் ஓரங்களை வெட்டியெடுத்து தண்ணீரில் ஊறப் போடவும். பின்பு அவற்றைப் பிழிந்து உதிர்த்து 2 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். தயிரை அடித்துக் கலக்க வேண்டும். பெரிய வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக நறுக்கவும். பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கவும். கறிவேப்பிலையையும் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
மைதா அல்லது ரவை, அரிசி மாவு ஆகியவற்றில் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். அதில் ரொட்டியையும், தயிரையும், உப்பையும் சேர்த்து மீண்டும் கலக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும். அத்துடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்து ஆறியதும் ரொட்டி மாவுடன் கலந்து தோச கல்லில் ஊத்தி எடுத்தால் ரொட்டி தோசை தயார்.