ஓவர் எடையை உடனே குறைக்கணுமா? சோம்பை இப்படி சாப்பிடுங்க, சட்டுனு குறையும்

Weight Loss Tips:  சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எடை குறைப்பில் மிக அதிக பலன்கள் கிடைக்கும். இதில் முக்கியமான ஒன்று சோம்பு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2023, 02:40 PM IST
  • ஒரு பெரிய ஸ்பூனில் சோம்பு விதைகளை எடுத்து கேஸ் அடுப்பில் மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • இதில் தேவைப்பட்டால் இனிப்புக்காக சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம்.
  • ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பிறகும், இந்த கலவையை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஓவர் எடையை உடனே குறைக்கணுமா? சோம்பை இப்படி சாப்பிடுங்க, சட்டுனு குறையும் title=

விரைவான எடை இழப்பு குறிப்புகள்: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதிகரிக்கும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சரியான ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி வழக்கமான எடை இழப்புக்கு அவசியம். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எடை குறைப்பில் மிக அதிக பலன்கள் கிடைக்கும். இதில் முக்கியமான ஒன்று சோம்பு. சோம்பு உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகின்றது. இதை உட்கொள்வதால் உடலைக் கட்டமைப்புடன் வைத்திருப்பதிலும் உதவி கிடைக்கிறது. சோம்பின் நன்மைகள் ஏராளம். ஆனால், இதை சரியான முறையில் உட்கொள்வதும் மிக முக்கியமாகும். 

உடல் ஆரோக்கியத்தின் நண்பன்: சோம்பு

தினமும் அதிகபட்சம் இரண்டு ஸ்பூன் சோம்பு உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் சோம்பை உட்கொள்ளலாம், அல்லது, இதை தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம். சோம்பை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். விரைவான எடை இழப்புக்கு சோம்பை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

சோம்பை எப்படி உட்கொள்ள வேண்டும்

சோம்பு தூள்

ஒரு கைப்பிடி சோம்பை எடுத்து நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். தயிர், சர்க்கரை பாகு, டீ அல்லது காபி போன்ற எந்த பானத்தில் வேண்டுமானாலும் இந்த பொடியை கலக்கலாம். அதனுடன் வெந்தயம், கருப்பு உப்பு, பெருங்காயம் மற்றும் சர்க்கரை என சுவைக்கு ஏற்ப சேர்த்து உட்கொள்ளலாம். இதன் மூலம் இந்த பானத்தின் சுவை அதிகரிப்பதோடு இதன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும். இந்த பொடியை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி, அதன் மூலம் உடல் எடை குறையும். 

தண்ணீருடன்

சோம்பை தண்ணீருடன் கலந்து குடிப்பது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் செரிமான பிரச்சனைகளைக் குறைக்க ஒரு பொதுவான வழியாக பார்க்கப்படுகின்றது. ஒரு கைப்பிடி சோம்பு விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும். இரவு முழுவதும் இதை அப்படியே வைத்திருந்து காலையில் குடிக்கவும். இது உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகபட்சமாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது. இரண்டு கிளாஸ் சோம்பு தண்ணீரை உட்கொள்வது உடல் எடை இழப்புக்கு ஒரு நல்ல தீர்வாகும். இது உடல் பருமனை குறைக்க உதவும். இதை காலையில் ஒரு கிளாஸ் மற்றும் மாலையில் ஒரு கிளாஸ் என குடிக்க பழக்கப்படுத்திக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ புரோட்டீன் உணவுகள்!

தேநீர்

சோம்பு விதைகள் கொண்டு தேநீர் தயாரிப்பது மிகவும் எளிமையான, ஆனால் நல்ல பயன்களை அளிக்கக்கூடிய ஒரு தீர்வாக இருக்கும். இதிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெற இதை தினமும் குடிக்கலாம். உங்கள் மாலை தேநீர் தயாரிக்கும் போது, கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி சொம்பு சேர்க்கவும். இது தவிர, நீங்கள் சோம்பு விதைகளுடன் அரை தேக்கரண்டி வெல்லத்தையும் சேர்த்து இந்த அற்புதமான தேநீரை ருசிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும், வாயின் சுவையை அதிகரிக்கவும், உடலை குளிர்விக்கவும் உதவும்.

வறுத்து பயன்படுத்தலாம்

ஒரு பெரிய ஸ்பூனில் சோம்பு விதைகளை எடுத்து கேஸ் அடுப்பில் மிதமான சூட்டில் வறுக்கவும். இதில் தேவைப்பட்டால் இனிப்புக்காக சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பிறகும், இந்த கலவையை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதில் இனிப்பு சேர்த்து சாப்பிடுவதால், இனிப்பு சுவை காரணமாக அடிக்கடி பசி எடுப்பதும் கட்டுப்படுகிறது. வறுத்த பெருஞ்சீரகத்தை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டும் தினமும் உட்கொள்ளலாம்.

(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News