உடல் எடையை குறைப்பது அவ்வளவு கடினமானதல்ல, அது ஒரு சுலபமான விஷயம் தான். இதனை செய்ய முதலில் உங்களை நீங்களே ஊக்குவிக்க வேண்டும். அதே சமயம் உங்கள் உடல் எடை குறைப்பு பயணம் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வது என இவற்றை முறையாக கடைபிடித்தாலே உடம்பை குறைத்துவிடலாம். இதனை செய்தால் உடல் எடை குறைந்துவிடும், இதை சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும் என இணையத்தில் பரவும் எந்த செய்தியையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டாம். வீட்டில் சமைக்கக்கூடிய பாரம்பரிய முறையிலான உணவுகளையே அதிகம் உட்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | 10 நாளில் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி
உணவை குறைவாக சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என நினைத்து உணவின் அளவை குறைக்காதீர்கள். உங்களது பசிக்கு சாப்பிடுங்கள், வயிற்றுக்கு போதாத உணவை உண்பது உங்களுக்கு ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்திவிடக்கூடும். உங்களுக்காக நீங்கள் உங்கள் எடையை குறையுங்கள், அடுத்தவர்களின் பாராட்டை பெறுவதற்காக அதனை செய்யாதீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக உணர்கிறீர்களா என்பதை கவனியுங்கள், நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்தால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என குறைந்த நாட்களுக்குள் உடல் எடை குறைக்கும் முயற்சியை ஒருபோதும் செய்யாதீர்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி உங்களது ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்.
பொதுவாக நமது உடல் ஒரு செயல்முறையை முழுமையாக ஏற்றுக்கொள்ள 12 வாரங்கள் ஆகிறது, அப்படி இருக்கையில் உடனே எடையை குறைக்க முயல்வது தவறு. ஒரு வருடத்தில் உங்கள் உடலில் மாற்றம் ஏற்படுவது தான் உங்களுக்கு ஆரோக்கியமானது. உடற்பயிற்சி செய்வதை ஒரு தண்டனையாகவோ அல்லது நிரபந்தமாகவோ கருதாதீர்கள், உடல் எடை குறைக்கும் செயல்முறையை உங்களது விருப்பப்பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உடற்பயிற்சிகளை செய்ய தொடங்குங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள், அதுவே உங்களுக்கு போதுமானது. நல்ல தூக்கம் எல்லாத்துக்கும் முக்கியமானது, அதிலும் உடல் எடை குறைப்பில் இது உதவுகிறது.
மேலும் படிக்க | எடையை குறைத்து, முக சுருக்கங்களை நீக்கும் 'White Tea' என்னும் மேஜிக் டீ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ