30+ பெண்களே உஷார்: ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதிகம் பேசப்படாத ஆனால் உடலுக்கு மிக தேவையான ஒரு வைட்டமின் ஆகும். இது உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் உதவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2024, 05:18 PM IST
  • தசைகளில் பலவீனம்.
  • நடக்கும் விதத்தில் மாற்றம்.
  • பாதங்களில் அசோகரியம்.
30+ பெண்களே உஷார்: ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்

Vitamin B12 Deficiency: நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் பி12 உடலுக்கு மிக அவசியமான ஒரு வைட்டமின் ஆக உள்ளது. அனைவருக்கும் இந்த வைட்டமினுக்கான தேவை உள்ளது. எனினும், 30 வயதை கடந்த பெண்களுக்கு இது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. மேலும் இந்த வயதை கடந்த பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது சகஜமாகி வருகிறது. உங்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதா? இதை எப்படி கண்டறிவது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 அதிகம் பேசப்படாத ஆனால் உடலுக்கு மிக தேவையான ஒரு வைட்டமின் ஆகும். இது உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவது முதல் டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு செல்களின் ஆரோக்கியம் என இதன் பயன்கள் ஏராளம். வைட்டமின் பி12 குறைபாட்டால் இரத்த சோகை (Anemia), உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்

வைட்டமின் பி12 உடலில் போதுமான அளவு இருக்கின்றதா என்பதை அவ்வப்போது நிச்சயமாக பரிசோதிக்க வேண்டும். உடலில் வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு ஏற்பட்டால் நம் உடல் அதற்கான சில அறிகுறிகளை காண்பிக்கும். அந்த முக்கிய அறிகுறிகளை பற்றி இங்கு காணலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் (Symptoms of Vitamin B12 Deficiency)

நடப்பதில் சிரமம் 

வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency) ஏற்பட்டால் 30 வயதை தாண்டிய பெண்களுக்கு பொதுவாக அதிக தூரம் நடப்பதில் சிரமம் (Difficulty in walking) ஏற்படலாம். நடக்கும் போது அவர்களுக்கு உடலில் சமநிலை இல்லாமல் போகலாம்.

தசைகளில் பலவீனம் 

வைட்டமின் பி12 குறைபாட்டால் தசைகள் பலவீனம் (Weak Muscles) அடைய தொடங்குகின்றன. இதனால் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது, சிரமமான காரியங்களை செய்வது ஆகியவை கடினமான பணிகளாக தோன்ற ஆரம்பிக்கும்

நடக்கும் விதத்தில் மாற்றம் 

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் நாம் நடக்கும் விதத்தில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படும். கால்களை தேய்த்துக்கொண்டு நடப்பது, நிலையற்ற பாத அசைவுகள் ஆகியவை இதன் அறிகுறிகளாக உள்ளன.

மேலும் படிக்க | ஊட்டச்சத்து இருந்தாலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு எதிரியாகும் ‘சில’ ஆரோக்கிய உணவுகள்!

பாதங்களில் அசோகரியம் 

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக பாதங்களில் சிறு சிறு தோல் விரிசல்கள் காணப்படும். இந்த வெடிப்புகள் வலியையும் உண்டாக்கலாம். இதனால் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

கால்களில் குளிர்ச்சி

அதிகப்படியான குளிர் இல்லாத வெயில் காலத்திலும் கால்கள் மட்டும் தொடர்ந்து குளிர்ச்சியாகவே (Cold Feet) இருந்தால் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 குறைபாட்டால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இவ்வாறு நடக்கின்றது.

நிறம் மாறுதல் 

நம் கீழ் உடலில் அதாவது கால்கள், பாதங்கள் ஆகிய இடங்களில் தோலின் நிறம் மாறினால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். இது கால்களுக்கான இரத்த சோகை என்றும் அழைக்கப்படுகின்றது.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் மருத்துவர்கள் அதற்கான உணவுகள், ஊசிகள் மற்றும் சப்ளிமெண்டுகளையும் பரிந்துரைக்கிறார்கள். இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இவற்றைக் கண்டவுடன் மருத்துவர்களை கண்டு பரிசோதித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இது அதிகமாக காணப்படுகின்றது. என்னும் போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டால் இதை பூரணமாக சரி செய்யலாம்.

மேலும் படிக்க | தினமும் ஏன் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News